கையூட்டு கேட்டு வணிகவரித்துறை பறக்கும் படையினர் மிரட்டுவதாக ஆட்சியரிடம் புகார்.
செ.சீனிவாசன்
UPDATED: Aug 23, 2024, 7:08:13 AM
நாகப்பட்டினம்
பழைய இரும்பு பிளாஸ்டிக் மற்றும் பாத்திரங்கள் விற்பனை செய்யும் தொழிலில் 300க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த 80 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
தாங்கள் முறையாக ஜிஎஸ்டி கட்டி தொழில் செய்து வருவதாகவும். வணிகவரித்துறை பறக்கும் படையினர் கடைகளுக்கு தேவையில்லாமல் பொய் வழக்கு பதிவு வருவதாகவும், லாரி மற்றும் டெம்போவில் லோடு ஏற்றி எடை போட்டால் மட்டுமே சரியான வரி கணக்கிட்டு ஜிஎஸ்டி பில் போட முடியும்.
Latest Nagai District News
ஆனால் எடை போட போகும் வாகனத்தை தடுத்து நிறுத்தி எடை மேடையில் வைத்தே பொய் வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதிப்பதால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் அரசுக்கு மிகப்பெரிய வரி இழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. வங்கி கடன் வாங்கி தொழில் செய்து வரும் எங்களை தொழில் செய்யவிடாமல், வணிக வரித்துறை பறக்கும் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர் ஆகாசிடம் மனு கொடுத்துள்ளோம்.
வணிகவரித்துறை
இது சம்பந்தமாக தஞ்சையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார் என தெரிவித்த அவர்கள் அதிலும் உண்மை நிலை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பழைய இரும்பு வியாபாரிகள் நல சங்கம் சார்பாக கடை அடைப்பு செய்து நியாயமான முறையில் போராட போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.