• முகப்பு
  • இலங்கை
  • பொதுபலசேனா அமைப்பினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பான விஷேட சந்திப்பு

பொதுபலசேனா அமைப்பினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பான விஷேட சந்திப்பு

அஷ்ரப். ஏ. சமத்

UPDATED: Jul 17, 2024, 2:19:09 PM

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்டத்துறை வல்லுநர்கள், அரசியல் பிரமுகர்கள், துறைசார்ந்தவர்கள், மற்றும் ஆலிம்கள் தெஹிவளை பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் நிர்வாகத்தின் பங்களிப்புடன் ஒரு விசேட சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சமூகம் சார்ந்த முக்கிய விடயங்களில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கேற்ப சிவில் சமூக அமைப்புக்களை அழைத்து கலந்தாலோசிக்கும் நடைமுறையின் அடிப்படையில் இந்த சந்திப்பும் நடைபெற்றது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு, நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் இருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெறுவதற்காக பொதுபலசேனா அமைப்பினால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் ஒத்துழைப்பு கோரப்பட்டிருந்தது.

இந்த விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பதை தீர்மானிக்க, முக்கிய சிவில் அமைப்புக்களின் பிரமுகர்கள் மற்றும் வழக்குத் தொடர்புடையவர்களுடன் ஜம்இய்யா கலந்துரையாடியது.

 

இப்பொதுமன்னிப்பு விவகாரம் நாட்டின் சட்டத்துறை மற்றும் உயர் நீதிமன்றத்துடன் நேரடியாக தொடர்புடையது என்பதால், முஸ்லிம் சமூகத்துடனும் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கின்றது. எனவே, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோ, முஸ்லிம் சிவில் அமைப்புக்களோ

,அரசியல் பிரமுகர்களோ நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கருத்துக்களை பெறாமல் இந்த விவகாரத்தில் எந்தவித நிலைப்பாடுகளையும் எடுக்க முடியாது என இந்த கலந்துரையாடலில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended