கண்டியில் பெருந்தோட்டத் தொழிலாளர் கௌரவிப்பு நிகழ்வு 

ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: May 29, 2024, 11:18:03 AM

Sri Lanka News

கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் 2024ம் ஆண்டுக்கான சர்வதேச தேயிலை தினத்திற்கு இணையாக தொழிலாளர் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம் பெற்றது. 

original/img-20240529-wa0005
கண்டியில் இயங்கும் 'சமாதானம்' தொண்டர் நிறுவனம் 24.5.2024 திகதி இடம் பெற்ற சர்வதேச தேயிலை தினத்திற்கு இணையாக இதனை ஒழுங்கு செய்திருந்தது.

Live Sri Lanka News

இதில் பிரதம அதிதியாக இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் கண்டி மாவட்ட இணைப்பாளர் விரஞ்சன் சுமனசேக்கர கலந்து கொண்டார். 

இவ்வைபவத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதனை ‘சமாதானம்’ அமைப்பின் தலைவரரான போதகர் வண. சமன் பெரேராவினால் மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி மஞ்சுலா மடஹபொலவிடம் கையளிக்கப்பட்டது. தேயிலை உற்பத்தி தொடர்பாக திறமைகாட்டிய கண்டி மாவட்ட பெண் தொழிலாளர்கள் பலரைப் பாராட்டும் வைபவம் ஒன்றும் இடம் பெற்றது. 

original/img-20240529-wa0010
பிரதம அதிதியான இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் கண்டி மாவட்டப் இணைப்பாளர் நிரஞ்சன் சுமன சேக்கர அங்கு உரையாற்றும் போதே தெரிவித்ததாவது-

Today Sri Lanka News

எமது வீடுகளுக்கு வீட்டு வேலைப் தொழிலாளர் ஒருவரைத் தேடும் போதுதான் தேயிலைத் தொழிலுடன் தொடர்பு பட்ட பெண்களின் அருமை பெறுமைகள் தெரிய வருகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய சேவையை வழங்கும் பெருந்தோட்டப் பெண்களுக்கு உயரிய மரியாதைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் சமூக ரீதியில் மிகவும் குறைந்த மட்டத்திலேதான் அவர்கள் மதிக்கப்படுகி்னறனர். 

original/img-20240529-wa0008

Latest Sri Lanka News And Updates

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்குவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். ‘லயன் வீடுகளில்’ தங்க வேண்டுமாயின் அவர்கள் கட்டாயம் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய வேண்டும் என்ற விதி மாற்றப்பட வேண்டும். பெருந் தோட்டங்களில் 200 வருடங்களாகப் பணியாற்றி வரும் தொழிலாளர் பரம்பரைக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் மனித உரிமைகள் அமைப்பு கவனம் செலுத்தி வருகிறது என்றார். 

 இவ்வைபவத்தில் கண்டி மாவட்ட உதவி செயலாளர் இந்துமினி மெனிக்திவெல , ‘சமாதானம்’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிரோசன் ஏக்கநாயக்கா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

VIDEOS

Recommended