• முகப்பு
  • இலங்கை
  • இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மறைவுக்கு அமைச்சர் ஜீவன் இரங்கல்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மறைவுக்கு அமைச்சர் ஜீவன் இரங்கல்

அருள் ராஜ் / கோபி

UPDATED: May 29, 2024, 11:49:30 AM

கொழும்பு இராஜகிரியவில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்த இலங்கை மற்றும் மாலைத்தீவு நாட்டுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிராங்கோயிஸ் பேக்டெட் இழப்புக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அனுதாபம் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு இன்று (28) காலை விஜயம் மேற்கொண்ட நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது இரங்கலைத் தெரிவித்து அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட நினைவுக்குறிப்பேட்டில் தனது அனுதாப செய்தியையும் பதிவிட்டார்.

மேலும் பிரான்ஸ் நாட்டின் தூதுவரின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனையடைந்தோம் என்றும், அத்தோடு பிரான்ஸுக்கும் இலங்கைக்கும் இடையில் நெடுங்காலமாக நட்பு பேணப்பட்டு வரும் நாடுகளாக திகழ்வதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலையில் பிரான்ஸ் நாட்டின் தூதுவரின் பங்களிப்பு இலங்கைக்கு மிகையாக காணப்பட்டதுடன் பெருந்தோட்ட பகுதிகளில் கால்நடை அபிவிருத்தி விடயம் தொடரர்பாக தயார் நிலையில் இருந்தபோது அவரின் திடீர் மறைவு பேரிழப்பாகும் என்று கவலை தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் மொகமட் காதர், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் அமைச்சருடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

VIDEOS

Recommended