நிலையான அபிவிருத்தியின் இலக்குகள் உள்ளுராட்சி சபைகள் சீரான நிர்வாகம்
அஷ்ரப் ஏ சமத்
UPDATED: Jun 12, 2024, 9:23:56 AM
ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமும் , பொதுநிர்வாக உள்ளுராட்சி மாகண சபைகள் அமைச்சு இணைந்து மற்றும் ஜரோப்பிய யூனியன் அனுசரனையுடன் இலங்கையில் உள்ள நான்கு மாகாணங்கள் வடக்கு கிழக்கு உட்பட 134 உள்ளுராட்சி சபைகளின் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு நிலையான அபிவிருத்தியின் இலக்குகள் உள்ளுராட்சி சபைகள் சீரான நிர்வாகம் என்ற தலைப்பில் இரண்டு நாள் வதிவிடப் பயிற்சிக் கருத்தரங்கு கொழும்பில் நடைபெற்றது.
ALSO READ | கமுதி திருவாடானையில் நாளை மின் தடை
இப் பயிற்சியின்போது தமது பிரதேச நகர மற்றும் மாநகர சபைகளின் ஊடாக வரி செலுத்தும் மக்களுக்கு சிறந்த சேவையையும் நிர்வாகத்தினையும் பெற்றுக் கொடுப்பது, சீரான டிஜிட்டல் முகாமைத்துவ முறைமைகள், தின்மக் கழிவு பொறிமுறைகள் , சிறந்த முகாமை,திட்டமிடல், பொறிமுறை,, கணக்கியல் , நிலையான சமத்துவம், நிலைபேறான விவசாயம், உணவு, பாதுகாப்பு போன்ற இலக்குகளில பயிற்சிகள் சிரேஸ்ட விரிவுரையாளார்கள் ஊடாக இத்துறை சார்ந்தவர்களுக்கு போதிக்கப்பட்டது .
இப் பயிற்சிக் கருத்தரங்கு முடிவுறும் நிகழ்வுக்கு பொதுநிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யஸ்த்தென்ன, ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான இலங்கை வதிவிடப் பிரநிதி அசுசி குப்ட்டா, ஜரோப்பிய யூனியன் துாதுவர் திருமதி கமமென் மெர்ரினோ ஆகியோர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டு அங்கு உரையாற்றினார்கள்