கவித்தேன் தூளி" உலக சாதனை நூல் வெளியீட

பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர் 

UPDATED: Oct 24, 2024, 2:48:22 PM

இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான என் ஜாகிர் உஷேன் அவர்களின் தலைமையில் சுமார் 5300 பக்கங்களைக் கொண்ட ஐந்தாயிரம் மழலைப் பாடல்களைக் கொண்ட ஒரே தொகுப்பான "கவித்தேன் தூளி "உலக சாதனையில் இணைந்து நூறு கவிஞர்களின் மழலைப் பாடல்களும் தனி நூலாக

தமிழ்த் தொண்டன் பைந்தமிழ்ச் சங்கம் மற்றும் நிலா வட்டம் இலக்கிய அமைப்பும் இணைந்து நிகழ்த்தவுள்ளனர்.

இவ் நிகழ்வில் விசேட பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளதோடு,இந்தியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் மற்றும் முன்னாள் அரசவைக் கவிஞர்,திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் அவர்களும் உலக சாதனை நூலை வெளியீட்டு வைப்பர்.

இந்தியா,மலேசியா,இலங்கை போன்ற பல நாட்டுக் கவிஞர்களும் இவ் உலக சாதனை நூலுக்கு பங்களிப்பு செய்துள்ளனர்.

இவர்களுக்கான கௌரவிப்பும் ,சிறப்பு சான்றிதழ் வழங்களும் ,பொற்கிழி வழங்களும் நடைப்பெறவுள்ளன.

இதே வேளை இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இலங்கையை எழுத்தாளர்கள் பலருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

Recommended