ஜூமாதுல் ஊலா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு

ஏ.எஸ்.எம்.ஜாவித்

UPDATED: Nov 2, 2024, 5:01:31 PM

ஹிஜ்ரி 1446 ஜூமாதுல் ஊலா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று நவம்பர் 02 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன்போது எப்பாகத்திலும் ஜூமாதுல் ஊலா மாத்திற்கான தலைப் பிறை தென்படாததால் இலங்கை வாழ் மக்கள் புனித ரபியுஉனில் ஆகிர் மாதத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை 03 ஆம் திகதி 30ஆக பூர்த்தி செய்து நாளை மஹ்ரிபு தொழுகையுடன் புனித ஜூமாதுல் ஊலா மாதம் ஆரம்பமாகின்றது என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுவின் தலைவர் மெளலவி அஷ் ஷெய்க் ஹிஷாம் அல் பத்தாஹி உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

original/img-20241031-wa0133
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் பிரதித் தலைவர் எம். ஸப்ரி மரிக்கார் பாவா தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதி மெளலவி எம்.என். முஹம்மத், உள்ளிட்ட அங்கத்தினர்கள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிநிதி ஏ.எஸ்.எம்.ஜாவித், வளிமண்டவியல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி மொகமட் ஸாலிஹீன், ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஸாவியாக்ளின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பிரகாரம் ஹிஜ்ரி 1446 ஜூமாதுல் ஆகிரா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி பார்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

original/img-20241029-wa0024_copy_300x450_2

VIDEOS

Recommended