• முகப்பு
  • இலங்கை
  • சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய ஐந்தாவது சமாதான உச்சி மாநாடு

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய ஐந்தாவது சமாதான உச்சி மாநாடு

Irshad Rahumathulla

UPDATED: Jul 3, 2024, 6:04:38 PM

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி ஏற்பாடு செய்திருந்த ஐந்தாவது சமாதான உச்சி மாநாடு கொழும்பு BMICH lavender மண்டபத்தில் நடைபெற்றது.

original/inshot_20240703_201908506
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஈரான் கலாச்சார மைய ஆலோசகர் Dr.Moazami Goodarzy மற்றும் Shak அமைப்பின்இந்திய உதவி பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி பினா காந்தி டியோரி மற்றும் ஐக்கிய அமெரிக்க incruises நிறுவனத்தின் இந்திய பிராந்திய பணிப்பாளர் விஷ்ணு மது.இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன் போது சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் வகையில் Young entrepreneurs award 2024 விருது வழங்கப்பட்டது. இதன் போது -

எழுத்தாளர்கள்,

பத்திரிகையாளர்கள்,

திரைப்பட இயக்குனர்கள்,

அழகுக்கலை நிபுணர்கள்,

தொழில் வல்லுநர்கள்

சமூக சேவகர்கள், அறிவிப்பாளர்கள்,

கலைஞர்கள் போன்ற பல்வேறு நபர்களுக்கு பாராட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

original/inshot_20240703_202000827
மேலும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் புதிய அங்கத்தவர்களாக இணைந்த உறுப்பினர்களுக்கு, பிரதம அதிதிகளின் கரங்களினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் உத்தியோக பூர்வ இணையதளத்தினை Saarc அமைப்பின்இந்திய உதவி பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி பினா காந்தி டியோரி அவர்கள் திறந்து வைத்தார்.

இதன்போது அனாதை பிள்ளைகளுக்கு பாடசாலை பைகள் மற்றும் அங்கவினர்களுக்கு சர்க்கரை நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் chairman கலாநிதி எம். ஏ. சீ. மஹசும், அதன் தலைவர் அமீர் கான், பணிப்பாளர் குபேரலிங்கம், ஆலோசகர் நசீம், பணிப்பாளர் அப்துல் ரசாக்,மற்றும் ஊடகப்பணிப்பாளர் ஊடகவியலாளர் பஸ்லான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended