• முகப்பு
  • இலங்கை
  • வெசாக் தினத்தை முன்னிட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தினால் அன்னதானம் வழங்கும் நிகழ்வு

வெசாக் தினத்தை முன்னிட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தினால் அன்னதானம் வழங்கும் நிகழ்வு

உமர் அறபாத் - ஏறாவூர்

UPDATED: May 23, 2024, 5:05:09 PM

வெசாக் தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஒன்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தினால் 23/05/2024 வியாழக்கிழமை இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹர்ஷடி சில்வா தலைமையில் இடம்பெற்ற து.

இவ் அன்னதான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஏறாவூர் பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர்.பியந்த கலந்து சிறப்பித்ததுடன், ஏறாவூர் புளிததலாராம விகாரையின் விகாராதிபதி அலுத்வெவ கம்மரத்ன தேரரின் பங்கேற்புடன் பொலிஸ் நிலைய உப பரிசோதகர் எஸ்.எல்.சரூக்,நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் நிகழ்வு இடம்பெற்றது.

வீதியால் பயணித்த பல நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் குளிர்பானம் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

VIDEOS

RELATED NEWS

Recommended