• முகப்பு
  • இலங்கை
  • அதிபர் ஆசிரியர்கள் வவுனியாவில் மாபெரும் போராட்டமும் பேரணியும்

அதிபர் ஆசிரியர்கள் வவுனியாவில் மாபெரும் போராட்டமும் பேரணியும்

வவுனியா

UPDATED: Jun 12, 2024, 12:05:14 PM

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இரண்டு மணியளவில் ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சம்பளம் முரண்பாட்டை நீக்கு, மூன்றில் இரண்டு சம்பள பகுதியை வழங்கு, இலவச கல்வியை தாரை வார்க்காதே, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், மாணவர்களின் போசாக்கு நிலையை உறுதி செய், போதைப் பொருளைக் கட்டுப்படுத்தி பெற்றோரிடம் பணம் அறவிடுவதை நிறுத்து,

ஆசிரியர் சேவையில் பதவி உயர்வை வழங்கு, கல்வியை தனியார் மயப்படுத்தாதே, இலவச கல்வியை பலியிடாதே, சுற்று நிருபங்களால் சுமையை அதிகரிக்காதே, ஆசிரியர்களின் உரிமையை நிலை நிறுத்து போன்ற கோஷங்கள் எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனை வரை ஊர்வலமாக சென்று அவ்விடத்தில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை அடுத்து அங்கிருந்து மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்து தமது போராட்டத்தை நிறைவு செய்திருந்தனர்.



 

VIDEOS

Recommended