தாருல் உலூம் மத்ரஸாவினால் முற்றிலும் இலவசமாக இஜாஸா எனும் குர்ஆன கற்கை ஆரம்பம்
ஏ.எஸ்.எம்.ஜாவித்
UPDATED: Oct 6, 2024, 3:30:22 PM
தெஹிவலை பெரிய ஜும் ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பள்ளிவாசலில் இயங்கும் தாருல் உலூம் மத்ரஸாவினால் முற்றிலும் இலவசமாக இஜாஸா எனும் குர்ஆனிக் கற்கையை இன்று (06) உத்தியோக பூர்வமாக பள்ளிவாசலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பள்ளிவாசலின் தலைவர் இஸ்மாயில் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் ,ஏனைய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிநிதிகள் , மஸ்ஜிதுகளின் சம்மேளன உறுப்பினர்கள், உலமாக்கள் ,நலன் விரும்பிகள் ,ஜமாத்தினர்கள் , தாருல் உலூம் மத்ரஸா மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அஷ்ஷெய்க் அல் காரி பெளஸான் அவர்களின் கிராமத்துடன் நிகழ்வு ஆரம்பமானது வரவேற்புரையை பள்ளிவாசலின் செயலாளர் தாஹிர் ஹாஜி வழங்கினார், நிகழ்வின் அறிமுக உரையை அஷ்ஷெய்க் ஹூஸ்னி முப்தியும், பாடத்திட்டங்கள் தொடர்பான விஷேட உரையை அஷ்ஷெய்க் றியாஸ் முப்தியும் வழங்கினர், நன்றி உரையை அஷ்ஷெய்க் பாஹிம் முப்தி வழங்கினார். நிகழ்ச்சிகளை சிரேஸ்ட ஊடகவியலாளர் மெளலவி அப்துர் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.குர்ஆனை கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.