• முகப்பு
  • ஆன்மீகம்
  • பாபநாசம் அருகே மேலவழுத்தூர் வேம்படி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 9-ம் ஆண்டு பால்குடம் திருவிழா.

பாபநாசம் அருகே மேலவழுத்தூர் வேம்படி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 9-ம் ஆண்டு பால்குடம் திருவிழா.

ஆர்.தீனதயாளன் 

UPDATED: Apr 28, 2024, 10:04:25 AM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேலவழுத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி சன்னதி தெருவில் அமைந்துள்ள வேம்படி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 9-ம் ஆண்டு பால்குடம் மற்றும் காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது..

முன்னதாக குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து. திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல வழுத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

 

VIDEOS

Recommended