திருவாரூர் நகர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த 35 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓடம் போக்கி ஆற்றில் கரைக்கப்பட்டன.
ஜெயராமன்
UPDATED: Sep 9, 2024, 7:17:41 PM
திருவாரூர் மாவட்டம்
இந்து முன்னணி நடத்தும் 35 ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா இந்து மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடபட்டது.
சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது அதனை ஒட்டி அனைத்து கிராமங்களிலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தமிழ்நாடு அரசின் நெருக்கடியினால் கிராமங்களில் உள்ள விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக 9.9.2024 திருவாரூர் விஜயபுரம் மார்க்கெட் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ உமை காளியம்மன் ஆலயத்தில் இருந்து ஊர்வலமானது புறப்பட்டு திருவாரூர் நகரின் முக்கிய கடைவீதி, மார்கெட் ரோடு, ஆழித்தேரோடும் நான்கு ரத வீதிகளின் வழியாக ஊர்வலமானது மேளதாளங்கள், சிவகனவாத்தியங்கள், டிரம்ஸ் செட், கிளாரினெட் வாத்தியங்கள் முழங்க ஓடம்போக்கி ஆற்றில் 9.9.2024 இரவு விசர்ஜனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா
இந்நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டனர்.
விழாவின் துவக்கத்தில் ஆசி உரையாக திருக்கைலாய பரம்பரை வேலாக்குறிச்சி ஆதீனம் 18 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் சுவாமி கோரக்ஸானந்தா மடாதிபதி நன்னிலம் ஸ்ரீ நாராயண தாண்டவேசுவர ஜீவசமாதி ஆலயமடம் நன்னிலம் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
முன்னதாக இந்து முன்னணி நகர பொதுச் செயலாளர் நீலகண்டன் வரவேற்புரை ஆற்றினார்.
Aanmegam
இந்து முன்னணி நகரத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மாதவரம் செல்வகுமார் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வின் நிரைவுரை மற்றும் முழு ஏற்பாட்டினை இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் விக்னேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.