• முகப்பு
  • புதுச்சேரி
  • அரசனை நம்பி புருசனை கைவிட்டது போன்ற நிலைமையில் சிக்கித் தவிக்கிறார் தமிழிசை.

அரசனை நம்பி புருசனை கைவிட்டது போன்ற நிலைமையில் சிக்கித் தவிக்கிறார் தமிழிசை.

சக்திவேல்

UPDATED: Apr 8, 2024, 12:19:54 PM

இந்தியா கூட்டணி கட்சியில் போட்டியிடும் புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் பைத்தியலிங்கத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தார்.

அப்பொழுது உழவர் கரை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற பிரச்சாரத்தில் திமுக தொகுதி தலைவர் கலிய. கார்த்திகேயன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பிரச்சாரத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன்....

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உண்மையிலேயே சுயமரியாதையோடு முதலமைச்சராக இருக்கிறாரா என்றும் பதவியைக் காட்டிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை தான் முக்கியம் இவை அனைத்தையும் இழந்து விட்டு இன்று ரங்கசாமி முதலமைச்சராக நீடிக்கிறார் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்று கடுமையாக விமர்சித்தார்.

சில நேரங்களில் சுயமாக முடிவெடுக்க முடியவில்லை என்று ரங்கசாமி புலம்பி கொண்டிருக்கிறார் எதற்காக இந்த புலம்பல் ஏன் புலம்ப வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அவர்...

சுதந்திரமாக சுயமரியாதையோடு செயல்பட முடியவில்லை என்றால் இந்த மாநில மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்றார்.

எங்கள் கூட்டணி வேட்பாளரை எதிர்த்து இரண்டு கூட்டணியினர் போட்டியிடுகின்றனர் அதில் ஒன்று நள்ளிரவு கூட்டணி மற்றொரு கூட்டணி கள்ள கூட்டணி இந்த இரண்டு கூட்டணி கட்சிகளையும் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முத்தரசன்...

இந்த இரண்டு கூட்டணி கட்சிகளும் எதற்காக போட்டி போட வேண்டும் உங்கள் லட்சியம் என்ன என்பதை சொல்ல வேண்டும், இந்த இரண்டு கூட்டணியும் இந்திய நாட்டிற்கு எதிரான கூட்டணி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கூட்டணி ஜனநாயகத்திற்கு எதிரான கூட்டணி இவர்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் வாரிசு பற்றி பேசும் மோடி புதுச்சேரியில் ரங்கசாமி யார்? நமச்சிவாயம் யார்? என்று கேள்வி எழுப்பிய அவர்..

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கொஞ்ச காலம் பணியாற்றிய சகோதரி தமிழிசை கைகள் எவ்வாறு நீண்டது பெட்டியை வாங்கியது என்று அனைவருக்கும் நன்றாக தெரியும் என்று குறிப்பிட்டார்.

தற்போது அவர் அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல தமிழிசை நிலைமை உள்ளது என்று கடுமையாக விமர்சித்தார்.

நாட்டில் கட்சி தீவு பிரச்சனை கிளப்பி விட்டு திருவிழா கூட்டத்தில் திருடும் திருடனை போல மோடி விழிப்பதாக குற்றம் சாட்டிய அவர் பத்தாண்டு காலம் கட்ச தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் இலங்கை அமைச்சருக்கு கடிதம் எழுதினீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

கச்சத்தீவை பற்றி இப்போது பேசும் நரேந்திர மோடி 10 ஆண்டுகள் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் தமிழகத்தில் நைனார் நாகேந்திரன் வீடு மட்டுமல்ல தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அனைத்து பாஜக வேட்பாளர்களின் வீடுகளையும் சோதனை செய்ய வேண்டும்

எல்லார் வீட்டிலேயும் பணம் இருக்கிறது வெளிமாநிலங்களில் இருந்து பணம் வருகிறது இந்த பணத்தை வைத்து தான் தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள், எனவே தேர்தல் துறை அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மூவரை மட்டும் கைது செய்து இருக்கிறார்கள் இது மட்டும் பத்தாது நைனார் நாகேந்திரன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

  • 19

VIDEOS

Recommended