• முகப்பு
  • புதுச்சேரி
  • ஒரு கோடி அப்பு ஒரு கோடி புதுச்சேரியில் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வைரலாகும் போஸ்டர்.

ஒரு கோடி அப்பு ஒரு கோடி புதுச்சேரியில் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வைரலாகும் போஸ்டர்.

சக்திவேல்

UPDATED: Mar 29, 2024, 1:38:14 PM

இந்தியா கூட்டணி சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் பதிற்றுலிங்கம் போட்டியிடுகிறார்.

இவர் கடந்த இரண்டு தினங்களாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

Also Watch : நீங்கள் இது ஜனநாயக நாடு என்று நினைத்தாள் நான் ஒன்னும் பண்ண முடியாது - சீமான்

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் புதுச்சேரிக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம் என்று சாதனைகளை சொல்லி காங்கிரஸ் வேட்பாளர் வாக்குகளை சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில் புதுச்சேரி பாராளுமன்ற வேட்பாளர் வைத்திலிங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன சாதனைகள் செய்தார் என்று பட்டியலிட்டால் ஒரு கோடி ரூபாய் பரிசு என்ற போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Also Watch : தனது கட்சியின் சின்னத்தையே மறந்து கை சின்னத்தில் ஓட்டு கேட்ட ஜிகே வாசன்

புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் என்ற பெயரில் பரவும் இந்த போஸ்டரால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

புதுச்சேரி தேர்தல் களத்தில் பாஜக வேட்பாளரும் காங்கிரஸ் வேட்பாளரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில் சமூக வலைத்தளத்தில் வைத்தியலிங்கத்தின் இந்த போஸ்டரால் காங்கிரஸ் கட்சியினர் பெறும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

  • 6

VIDEOS

Recommended