• முகப்பு
  • இலங்கை
  • பெண்ணை ஆணுக்கு ஆடையாகவும் ஆணை பெண்ணுக்கு ஆடையாகவும் படைத்துள்ளோம்" ---அல் குர்ஆன்.

பெண்ணை ஆணுக்கு ஆடையாகவும் ஆணை பெண்ணுக்கு ஆடையாகவும் படைத்துள்ளோம்" ---அல் குர்ஆன்.

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 7, 2024, 12:52:21 PM

குணசாளியான ஸ்திரியைக் கண்டுகொண்டீ ர்களா , அவளது மதிப்பு சிகப்பு மாணிக்கத்தைவிட (Ruby) உயர்ந்தது.--- பைபிள் 31ம் அத்தியாயம் 10வது வசனம்.

*ஒரு தந்தைக்கு 3 அல்லது 2 பெண் பிள்ளைகள் இருந்து அவகளை உரிய முறையில் சிலவு செய்து நன்றாக, ஒழுக்கமாக வளத்து இறுதி வரை பராமரித்தால், அந்தப் பிள்ளைகள் அந்தத் தந்தைக்கு நரகத்தை விட்டும் பாதுகாக்கும் திரையாக அமைவார்கள் ."*-- நபி பெருமானார் (ஸல்) தர்ஹீப்.

Also Read : வடகிழக்கு இளைஞர்கள் நாட்டை விட்டு தப்பி புலம் பெயர்கின்றனர் யார் காரணம் சாணக்கியன்?

சர்வதேச மகளிர் தினம் வருடம் தோறும் மார்ச் மாதம் 8ம் திகதி கொண்டாடப்படுகின்றது. இந்த சர்வதேச மாதர் தினம் 1975ம் ஆண்டு ஐ.நா.வினால் பிரகடனப்படுத்தப்பட்ட து என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம்  எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.

 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

Also Read : முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்

 எனினும் இதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே மகளிர் தினம் ஒரு சில மேற்கத்திய நாடுகளில் அனுசரிக்கப்பட்டு வந்தது. மாதர் தின யோசனை, முதன் முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஸ்கிட் என்ற மாக்ஸிய சமூக ஆர்வலரால் முன் வைக்கப்பட்டது.

இதன் வளர்ச்சி 1910ம் ஆண்டு நிவ்யோர்க் நகரில் சம்பள அதிகரிப்பும், வேலைநேர குறைப்பும் கோறி பெண்களால் நடாத்தப்பட்ட ஊர்வலத்தோடு விரிவடையத்து டங்கியது. இதன் பின் 1917ம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் ரஷ்ய புரட்சியில் தீவிர பங்கு கொண்ட முற்போக்குப் பெண்களால் இவ்வியக்கம் தீவிரமடைந்தது.

இக்காலத்தில் நடைபெற்ற முதலாம் உலகப் போரின் போது மிகவும் பாதிக்கப்பட்ட ரஷ்ய பெண்கள் *"எங்களுக்கு போர் வேண்டாம்; ரொட்டியும் அமைதியுமே தேவை"* என பகிரங்கமாகக் கோஷமிட்டனர். இதன் பின்னர் ஒஷ்றியா, டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளில் பெண்கள் இயக்கங்கள் வளர்ச்சி அடைந்து *2011ம் ஆண்டு முதலாவது உலக மகளிர் தினம்* கொண்டாடப்பட்டது.

Also Read : வெளிநாட்டு பணியகத்தினால் ஊடகவியலாளர்களுக்கு செயல் அமர்வு

1789ம் ஆண்டின் பிரெஞ் சுப் புரட்சி யின் தத்துவங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாடுகளோடு, சமஉரிமை, சம சந்தர்ப்பம், ஊழியத்துக்கேற்ற ஊதியம். பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பு, சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான சட்டங்கள், குடும்ப சமூக வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள், அரசியல் அதிகாரதில் தகுந்த பிரதிநிதித்துவம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் நிகழ்ச்சிகளே சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது ‌

பண்டைய பாபிலோனிய நாகரிகத்தில் ஆண் கொலை செய்தால் அவனது மனைவிக்கே மரண தண்டனை வழங்கப்பட்டது.

அன்றைய கிரேக்கத்தில் பெண்கள் தீமைகளின் பிறப்பிடமாகக்கருதப்பட்ட  பெண்டூரா" என்ற பாவப் பெட்டிக்குச் சமமாகவே கருதப்பட்டனர். 

பண்டைய எகிப்தில் பெண்கள் பேயின் அவதாரமாகவும் நுகர்வுப் பொருளாகவுமே கருதப்பட்டனர்.

Also Read : குவைத் தேசிய தினம் கொழும்பில் இடம்பெற்றது

முகம்மது நபி (ஸல்)   அவர்களும் முன்திய " ஜாஹிலியா" கால அரேபியாவில் அன்று பிறந்த பெண் குழந்தைகள் அன்றே உயிரோடு புதைக்கப்பட்டன.

 1400 வருடங்களுக்கு முன் அருளப்பட்ட குர்ஆனின் பிரகடனத்தினாலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளாளும், கருவின் சிசு உரிமையிலிருந்து சகல வாழ்வில் உரிமைகளும் மாதர்களுக்கு சம்பூர்ணமாக வழங்கப்பட்டன.

 உலகிலே பெண்களுக்கான முதன் முதல் சொத்துரிமை திரு குர்ஆனாலேயே வழங்கப்பட்டது என்றால் அது மிகையாகாது".

ஆணும் பெண்ணும் சமம் என்று கருதப்படும் இக்காலகட்டத்தில் ஆணும் பெண்ணும் சம சீரான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் அல்ல என்பதை உணரவேண்டும் ‌ பௌதிக ரீதியாகவும் மனோ நிலை ரீதியாகவும் இயற்கையாகவே இருவரும் வேறு பட்டவர்கள்.

அதனால் தான் உடை அலங்கார அறைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறாகவே அமைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended