• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பரமக்குடி நகரில் சுட்டெரிக்கும் வெயிலால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை சுற்றி வளைக்கும் தர்பூசணி கடை

பரமக்குடி நகரில் சுட்டெரிக்கும் வெயிலால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை சுற்றி வளைக்கும் தர்பூசணி கடை

மாமுஜெயக்குமார்

UPDATED: May 26, 2023, 10:48:23 AM

கோடை காலம் வந்தாலே, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் சிரமத்திற்கு ஆளாவதை காலந்தொட்டு இருந்து வருவதை நாம் அறிவோம்.

அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் கோடைகாலம் வருவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது.

குறிப்பாக, அக்னி நட்சத்திரம் துவங்கிய மே.04-ந்தேதி முதல் முதல் ஒரு வார காலத்திற்கு வெப்ப சலனம் காரணமாக வெயில் மந்தமாகவும், சாரல் மழை பொழிவும் இருந்து வந்தால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை.

பின்பு வெயில் சுட்டெரிக்க துவங்கியதால் காலை 07.00 மணிக்கே வெயிலின் தாக்கமும்... புழுக்கமும்.. அதிகரிக்க துவங்கியது.

இதனையொட்டி, மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தர்பூசணி கடையில் சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என பொதுமக்கள் அப்பாதையை கடந்து செல்ல முற்படும்போது தனது வாகனங்களை நிறுத்தி தர்பூசணி, அன்னாசி போன்றவற்றை பழமாகவும், சூஸாகவும் அருந்திச் செல்வதை கண் கூடாக காண முடியும்.

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு இந்த கடையை பொதுமக்கள் நாடி வந்து அருந்தி செல்வதற்கு கடை உரிமையாளர்களின் கனிவான உபசரிப்பும், பழங்களின் ருசிக்கரத் தன்மையும் என்பதை மக்கள் பேசிச் செல்வது காதுகளில் ரீங்காரமாய் ஒலிக்கிறது...

அக்னி நட்சத்திரம் மே.28-ந் தேதி முடிவடைந்தாலும், தொடர்ந்து 10 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்குமென்பதால் குளிர்ச்சி தரக்கூடிய தர்பூசணி கடையை மக்கள் நாடி வந்து செல்வார்கள் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

VIDEOS

RELATED NEWS

Recommended