• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மோடி அரசின் வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி கண்டித்து திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்.

மோடி அரசின் வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி கண்டித்து திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்.

JK 

UPDATED: Feb 23, 2024, 1:59:45 PM

வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்ய வேண்டும், வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யும் பாஜக அரசை கண்டித்தும் இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்துவதை உறுதிப்படுத்த வலியுறுத்தியும்,

வாக்குச்சீட்டு முறையினை நடைமுறை படுத்த வலியுறுத்தியும் தமிழக முழுவதும் இன்று விடுதலை சிறுத்தைகளை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Video Click Here : விவசாயிகளின் மீது நடக்கும் தாக்குதல் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற ஜிகே வாசன்

சென்னையில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி சிந்தாமணி அண்ணா சாலை அருகே மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், புல்லட்லாரன்ஸ் கலைச்செல்வன், குருஅன்புச்செல்வன், சக்திஆற்றலரசு ஆகியோர் தலைமையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை ஒருங்கிணைப்பில்,

Also Read : பட்டிமன்ற பேச்சாளர் பெண்ணிடம் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து காண்பித்து ஆபாச செய்கையில் ஈடுபட்ட போதை ஆசாமி

திருச்சி-கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி மண்டல துணைச் செயலாளர் பொன்.முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையை புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் புதுவை பாவாணன் வழங்கினார்.

Also Read : குடுகுடுப்பைக்காரர் மூலம் திமுகவினர் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளர் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாநிலத் துணைச் செயலாளர் அரசு, மாவட்ட பொருளாளர் சந்தன மொழி, மற்றும் நிர்வாகிகள் கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended