• முகப்பு
  • குற்றம்
  • போன் திருடி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவிப்பு

போன் திருடி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவிப்பு

வவுனியா

UPDATED: Feb 24, 2024, 3:09:07 AM

வவுனியா நகரப் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் போன் திருடி விற்ற குற்றச்சாட்டில்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

Also Read.1700 ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

வவுனியா, பழைய பேரூந்து நிலையப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஊடகதிறுவனம் ஒன்றில் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசி ஒன்று திருட்டுப் போயுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

முறைப்பாட்டையடுத்து தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக் கொடி அவர்களின் வழிகாட்டலில், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜயத்திலக தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட், பொலிஸ் சார்ஜன் திசாநாயக்கா (37348), பொலிஸ் கொன்டபிள்களான உபாலி (60945), தயாளன் (91792), ரணில் (81010) ஆகியோர் தலைமையிலான பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 

Also Read.திருக்கோவில் பிரதேசத்தில் ஊருக்குள் நுழைந்த முதலை         

இதன்போது குறித்த கைத்தொலைபேசி நகரப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் பொலிசார் மீட்டதுடன், குறித்த தொலைபேசியை திருடி விற்ற நபரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார். மீட்கப்பட்ட கைத்தொலைபேசியையும், கைது செய்யப்பட்ட நபரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended