• முகப்பு
  • அரசியல்
  • சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடந்தது உண்மை ஆணையத்திடம் ஆதாரம் உள்ளது. ஆர்.என்.ரவி.கூறியது முற்றிலும் உண்மையானது.

சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடந்தது உண்மை ஆணையத்திடம் ஆதாரம் உள்ளது. ஆர்.என்.ரவி.கூறியது முற்றிலும் உண்மையானது.

முத்தையா

UPDATED: May 25, 2023, 7:58:22 PM

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் கீரனூர் அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் (பரவச உலகம்), கடந்த 2023 மே 11- ம் தேதி, சேலம், எருமபாளையம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரின் 11 வயது மகன் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் R.G. ஆனந்த், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் . ச. உமா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. கலைச்செல்வன் ஆகியோருடன் இணைந்து, அந்த பொழுதுபோக்கு பூங்காவில், (25.5.23 -மாலை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது, சிறுவன் உயிரிழந்த பகுதி, நீர் விளையாட்டு இடங்கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு இந்த சம்பவம் குறித்து ஆணைய உறுப்பினர் ஆனந்த் அரசுத்துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். 

இதனை அடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பல்வேறு அரசு துறை அலுவலர்கள், பூங்கா உரிமையாளர்கள் ஆகியோருடன் ஆணைய உறுப்பினர் R.G. ஆனந்த் ஆலோசனை நடத்தினார். 

மேலும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உயிரிழந்த சிறுவனின் பெற்றோரை சந்தித்து அவர்களுக்கு, அரசின் உத்தரவுப்படி, பூங்கா நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள ரூ 4 லட்சத்திற்கான காசோலையையும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் R.G. ஆனந்த் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் வழங்கினார். 

இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் R.G. ஆனந்த், 

இராசிபுரம் அருகே தனியார் பொழுதுபோக்கு நீச்சல் குளம் பூங்காவில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து இந்த விசாரணையை தொடங்கியுள்ளது.

இதில், சிறுவன் ரசாயன ரீதியாகவோ, நீரில் மூழ்கியோ இறக்க வில்லை என தெரியவந்துள்ளது.

உடற்கூறு ஆய்வு முடிவில் இயற்கையான இறப்பு எனவும் கூறப்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல், சுகாதாரம், உணவு பாதுகாப்பு, விளையாட்டு, மின்சார வாரியம் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்களை கொண்ட குழுவை அமைத்து, இது குறித்து விசாரித்து வருகிறது என்றும்  இதுதொடர்பாக 7 நாட்களுக்குள் அந்த தனியார் பொழுதுபோக்கு பூங்கா பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக்குழுவின் விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் சிறுவன் இறப்புக்கு நஷ்ட ஈடு வழங்கும் வகையில், அந்த பூங்கா சார்பில் ரூ 4 லட்சம் சிறுவன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சிறுவனின் பெற்றோருக்கு ரூ 4 லட்சத்திற்கான நஷ்ட ஈடு இன்றே வழங்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள, பொழுதுபோக்கு பூங்கா, நீச்சல் குளங்களில் சிறுவர்கள் நீச்சல் பழகும்போதும், விளையாடும் போதும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற, அதுகுறித்து அறிக்கை ஒரு வார காலத்திற்குள், ஆணையம் சார்பில் அனைத்து மாநிலங்களில் முதன்மை செயலாளர்களுக்கு அனுப்பப்படும்.

இதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்றும்பொது, இதுபோன்ற இறப்புகளை தடுக்கலாம் என்றும், நாடு முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களில் அவர்களின் நலம் கருதி அவர்களை செயலி வழியாக அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் அதிகளவிலான குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் ரேகை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையிலே உள்ளதாகவும், இதற்கான ஆதாரம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் உள்ளதாகவும், நேற்று ஃ தான் சிதம்பரத்தில் கூறிய கருத்தை ஆளுநருக்கு எதிராக சில ஊடகங்கள் திரித்து கூறியுள்ளதாகவும், குழந்தை திருமணம் நடைபெற்றதாக சிறுமி மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் வற்புறுத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், 

தமிழக ஆளுனர் ஆர். என். ரவி கூறியது முற்றிலும் சரி என்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்தில் அடுத்த வாரத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் விசாரணை அமர்வுகள் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் குழந்தைகள் தொடர்பான சிறு சிறு பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றும்

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் R.G. ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இந்த ஆய்வின்போது நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச. உமா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. கலைச்செல்வன், சுகாதாரம், தொழிலாளர், காவல், உணவு பாதுகாப்பு, உள்ளிட்ட அரசு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended