Author: மாரிமுத்து
Category: மாவட்டச் செய்தி
தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அருகில் அண்ணா சிலை உள்ளது.
இந்த சிலையை சுற்றிலும் வட்டமாக இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா சிலை ரவுண்டானாவை சுற்றிலும் கீரை வியாபாரிகள் தினமும் காலை 5 மணியில் இருந்து 10 மணி வரை கீரை விற்பார்கள்.
இன்று 26.5.2023 காலை 6 மணிக்கு தூத்துக்குடி மடத்தூரைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் ஜெயகணேசன் (வயது 42) வழக்கம்போல கீரை மூட்டையை அவிழ்த்து கீழே சாக்கை விரித்து கீரையை வியாபாரத்திற்காக பரப்பி வைத்து விட்டு அந்த இரும்பு கம்பி வேலியில் சாய்ந்திருக்கிறார்.
அந்த இரும்பு கிரிலில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்திருக்கிறது.
இதை அறியாமல் அதில் சாய்ந்த ஜெயகணேசன் அந்த இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அண்ணா சிலையை சுற்றிலும் இரும்பு கிரில்லில் இரவில் ஒளிரக்கூடிய 4 ஹாலாஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
அந்த விளக்கு பொருத்தப்பட்டுள்ள இடத்தின் மின்சார வயர்களை உரிய முறையில் பராமரிக்காமல் இருந்ததினால்தான் இரும்பு வேலி முழுவதும் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சியின் இந்த அலட்சிய போக்கினால் அன்றாடம் உழைத்து சாப்பிடும் ஒரு அப்பாவி கீரை வியாபாரியின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது.
இறந்து போன ஜெயகணேசனுக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
அந்த குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
மாநகராட்சியில் ஜெயகணேசன் மனைவிக்கு வேலையும் வழங்க வேண்டும்.
கடும் வெயில் நேரத்தில் இந்த நிலை என்றால், இன்னும் மழை காலங்களில் எந்தெந்த இடங்களில் என்னென்ன நிலையோ?
பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட காலரிகள் எட்டே மாதத்தில் சிறிய காற்றுக்கே மொத்தமாக இடிந்து விழுந்திருக்கிறது.
அதில் விளையாட்டுப் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும்போது விழுந்திருந்தால் 500 பேர் வரை பலியாகி இருப்பார்கள்.
ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடியட்டும்...
இன்னும் என்னென்ன விபரீதங்கள் காத்திருக்கிறதோ?
மக்களே எல்லா இடங்களிலும் ஜாக்கிரதையாகவே இருங்கள்.
Tags:
#Tuticorinnews, #tuticorinnewstoday , #currentshock #electricshock #tuticorinnewspapertoday , #tuticorinnewspaper, #Tuticorinnewschannel , #Tuticorinnewsupdate, #Tuticorinlatestnews, #Tuticorinnews , #Tuticorinnewstodaylive , #Tuticorinlatestnews, #latestnewsintuticorin ,#thegreatindianews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தூத்துக்குடி , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltuticorin , #todaynewstuticorin #tamilnadu , #தூத்துக்குடிசெய்திகள்