• முகப்பு
  • குற்றம்
  • தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் விருது வழங்குவதாக கூறி பல லட்சங்கள் மோசடி,

தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் விருது வழங்குவதாக கூறி பல லட்சங்கள் மோசடி,

குமரி ஒற்றன்

UPDATED: May 17, 2023, 9:07:16 PM

கோவை மாவட்டத்தில் தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் விருது வழங்குவதாக கூறி பல லட்சங்கள் மோசடி,

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

வரும் 19-05-2023 அன்று பொள்ளாச்சியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பல சமூக விரோதிகளுக்கு விருது வழங்குவதாக தகவல் வந்ததை வைத்து அதை தடுக்கவே இந்த புகார் அளிக்கப்படுவதாக தெரிகிறது.

மேலும் அந்த சங்கம் 2021-2022ஆகிய இரண்டு வருடங்களுக்கு புதுப்பிக்காமல் உள்ளதாகவும் காலாவதியாகிவிட்டதாகவும் கூடுதல் தகவல்.

காலாவதியான சங்கம் பெயரில் விருது வழங்குவது முறையா? மேலும் சங்க விதிமுறைகளின்படி துறை சார்ந்தவர்களுக்கு (பத்திரிகை துறை) மட்டுமே விருது வழங்க அனுமதிக்கப்பப்டுள்ளது.

எது எப்படியோ மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended