• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கொட்டகுடி ஆற்றில் தடுப்பனை கட்ட இயலாது பொதுப்பணித்துறை கைவிரிப்பு நீர் ஆதரத்தை சேமிக்க வழி தெரியாத பொதுப்பணி துறை.

கொட்டகுடி ஆற்றில் தடுப்பனை கட்ட இயலாது பொதுப்பணித்துறை கைவிரிப்பு நீர் ஆதரத்தை சேமிக்க வழி தெரியாத பொதுப்பணி துறை.

கார்மேகம்

UPDATED: May 25, 2023, 6:24:19 AM

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கொட்டகுடி ஆற்றில் மழை நீரைச் சேமிக்கவும் கடல் நீரை தடுக்கவும் கோரி கடந்த 15 வருடத்திற்கும் மேல் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இராமநாதபுரம் பொதுப்பணித் துறை கொட்டகுடி ஆற்றில் தடுப்பனை கட்ட இயலாது என கோரிக்கை மனு நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் கொட்ட குடி ஆற்றில் மழை நீரை சேமிக்க அனை கட்டும் நல்ல திட்டத்தை நிரைவேற்றக் கூடாது என்றும் மக்கள் நல்ல பயனை அடைந்து விடக்கூடாது என்பதிலும் இராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணிதுறை பொறியாளர்கள் கண்னும் கருத்துமாக தடையாக இருந்து வருகிறார்கள்.

அரசு இயந்திரமே திட்டம் நிரைவேற தடையாக இருப்பதினால் சுதந்திரம் அடைந்தும் மக்கள் மத்தியில் முன்னேற்றம் எட்டவில்லை.

இராமநாதபுரம் பொதுப்பணித்துறை கொட்டகுடி ஆற்றில் தடுப்பனை கட்டும் விசயத்தில் முட்டால் தனமாக கோரிக்கையை நிராகரித்து மக்கள் நலனில் தடையாவும் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்படுகிறது.

அதனால் இராமநாதபுரம் பொதுப்பணித்துறை கொட்ட குடி ஆற்றில் தடுப்பனை கட்டும் திட்டத்தை செயல்படுத்த வேன்டும் தவறினாலோ தாமதப்படுத்தினாலோ மக்களை ஒன்று சேர்த்து அரசியல் கட்சி ஆதரவோடு போராட்ட களம் கான நேரிடும் என்றும் இப்பகுதி மக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நீராதரமே மணிதன் உயர்வாழ உந்து சக்தி அதற்கே தடை இடஞ்சலா அரசே சிந்திப்பாயா....

VIDEOS

RELATED NEWS

Recommended