• முகப்பு
  • விவசாயம்
  • தாளவாடி விவசாயிகள் சங்கம் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட க்ராஃபிட் மொபைல் செயலி.

தாளவாடி விவசாயிகள் சங்கம் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட க்ராஃபிட் மொபைல் செயலி.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 25, 2023, 8:04:51 PM

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன இந்த மலை கிராமங்களில் உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீன்ஸ், பச்சை மிளகாய், தக்காளி போன்ற காய் வகைகளும் மற்றும் ராகி, கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளும் பயிரிடப்பட்டு வருகின்றன.

இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் தானிய வகைகளை தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் வாங்கி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இங்கு விளைவிக்கப்படும் விவசாய விளைபர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை இதனால் தாளவாடி பகுதி விவசாயிகள் வேளாண் பொருட்களை எளிமையாக நேரடியாக சந்தைப்படுத்துவதற்கான க்ராஃபிட் மொபைல் செயலியை உருவாக்கியுள்ளனர்.

இந்த மொபைல் செயலின் மூலம் விவசாயிகளின் நலனுக்காக வேளாண் விலை பொருட்களை சந்தைப்படுத்தவும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் தாளவாடி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் பவுண்டேஷன் இந்த மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது.

டிஜிட்டல் உலகில் விவசாய வர்த்தக வரலாற்றின் முதல் முறையாக விவசாயிகளால் மொபைல் செயலி உருவாக்கப்பட்டு இதன் வெளியீட்டு விழா தாளவாடி அருகே உள்ள திகினாரை தனியார் பள்ளி மைதானத்தில் க்ராஃபிட் மொபைல் செயலியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தொடங்கி வைத்தார்..

அப்போது ஆ ராசா உரையாற்றிய போது இந்த க்ராஃபிட் மொபைல் செயலியை தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தையிலும் கொண்டு வர வேண்டும் எனவும் அல்லது மாவட்ட அளவில் உள்ள உழவர் சந்தைகளில் இந்த செயலியை கொண்டு வந்து அனைத்து உழவர் சந்தைகளையும் இணைத்து செயல்பட வேண்டும் என தமிழக முதல்வரை கேட்பேன் இது குறித்து அனைத்து வேளாண் துறை அதிகாரிகளும் இந்த நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தாளவாடி விவசாயிகள் சங்கத்தினர் ஒரு நல்ல செயலை செய்து உள்ளீர்கள் இதனை பாராட்டுகிறேன் என உரையாற்றினார்.

இந்த மொபைல் செயலி தமிழ் கன்னடம் மலையாளம் ஆங்கிலம் ஆகிய மொழியில் செயலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் செல்லமுத்து, பாரதிய கிசான் யூனியன் பொதுச் செயலாளர் யுத்வீர் சிங், கேரளா ஆதிவாசிகள் மகா சபா தலைவர் ஜானு ,கேரளா மாநில தென்னை விவசாயிகள் சங்க செயலாளர் டிவிசன், தாளவாடி காய்கறி வியாபாரிகள் சங்கம் அக்ரம்,

கர்நாடகா ராஜ்ஜிய ரயத்த சங்கம் ஹொன்னூர் பிரகாஷ், மகதி இன்போடெக் தலைவர் கிருஷ்ணா மாலி, க்ராஃபிட் செயலி திட்ட தலைவர் ப்ரனேஷ்மகேந்திரன் மற்றும் கேரளா ,கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாய சங்க தலைவர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended