• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வேல்முருகன் அவர்களிடம் வழங்கினர்.

நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வேல்முருகன் அவர்களிடம் வழங்கினர்.

குமரவேல்

UPDATED: May 26, 2023, 11:36:13 AM

நெல்லிக்குப்பம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் சட்டத்திற்கு புறம்பாக அளவீடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குறித்தும் இதுவரை சாலை விரிவாக்க பணிகளுக்காக நம்ம நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பினர் செய்த போராட்டங்கள் குறித்தும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான தி.வேல்முருகன் அவர்களிடம் நம்ம நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பினர் முறையிட்டனர்.

கடலூர் மாவட்ட தலைநகரை இணைக்கக் கூடிய சாவடி முதல் மடப்பட்டு வரை சென்னை கன்னியாகுமரி தொழில்தட திட்ட சாலையை 230கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நெல்லிக்குப்பம் பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஒருசில தனிநபர்களின் தலையீடு காரணமாக சாலையை மேலும் சுருக்கி சாலைகளை போடுவது அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம்!

இதனால் நெல்லிக்குப்பம் பகுதியில் பெருமளவில் சாலை விபத்துகள் நடப்பதும் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தொடர் போராட்டங்களுக்கு காவல்துறையில் அனுமதி மறுப்பு...

சாலை விரிவாக்கம் பணிகள் கடந்து வந்த பாதை...

கடந்த 2019அதிமுக ஆட்சி காலத்தில் மேற்படி சாலை 1660 கோடி ரூபாய்க்கு நான்கு வழிச் சாலையாக அப்போதைய தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி நம்ம நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பு சார்பில் பலகட்ட ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர்.

அப்போதும் ஒருசிலர் தங்களது சுயநலத்திற்காக 4வழிச்சாலை வேண்டாம் என்று பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு மனுக்களை அனுப்பி 4வழிச்சாலையை நீர்த்து போகச் செய்து முட்டுக்கட்டை போட்டனர்.

பின்னர் 4வழிச்சாலை இரண்டு வழிச்சாலையாக மாற்றம் கண்டு 10மீட்டர் சாலை எனவும் 2மீட்டர் மழைநீர் கால்வாய் மற்றும் மண்புருவம் 2மீட்டர் எனவும் RTI மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதையாவது சரியாக செயல்பட வலியுறுத்திய போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காலம் கடத்தி வந்தனர்.

பின்னர் 2019 டிசம்பர் 6ந்தேதி அன்று சாலை விரிவாக்கம் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி 1லட்சம் கையெழுத்து இயக்கம் பெயரில் கையெழுத்துக்கள் பெறப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் நம்ம நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பினர்.

சாலை விரிவாக்கம் பணிகளில் மீண்டும் தொய்வு ஏற்பட்டதை கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டம் பல்வேறு பேச்சு வார்த்தைகள்....

எதற்கும் கட்டுப்படாத மாவட்ட நிர்வாகம்.

அதன் காரணமாகவே கடந்த 8ந்தேதி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் கூட்டமைப்பு தலைவர் ஜெ.ராமலிங்கம் தலைமையில் நம்ம நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து கடந்த 9ந்தேதி RDO மற்றும் DSP தலைமையில் கடலூரில் அமைதிப் பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது.

அதில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கொடுத்த RTIயின் படி சாலை விரிவாக்கம் பணிகளை நிறைவேற்றவும், நெடுஞ்சாலை துறையினர் அளவீடு செய்து அளவின் படியும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கோரிக்கைகளை நம்ம நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது பேசிய DSP சபியுல்லா அவர்கள் RTI யில் கொடுத்த தகவல்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அளவீடுகள் தவறு என்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை வைத்துக்கொண்டு பேசியது கூட்டமைப்பினரை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

RTI தவறு என DSP சொன்ன போது மறுப்பு ஏதும் சொல்லாமல் அமைதிகாத்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மற்றும் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி ஆகியோர் நான் தவறான தகவல்களை RTI மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கொடுத்து விட்டேன்.

அதனால் தமிழக அரசிற்கும் நெல்லிக்குப்பம் வாழ் பொது மக்களுக்கும் சட்டத்திற்கு புறம்பாக தவறான தகவல்களை அளித்த காரணத்தால் காலதாமதம் ஏற்பட்டது.அதனால் நெடுஞ்சாலை துறையினர் சாலை பணிகளை மேற்கொள்ள வில்லை. நெல்லிக்குப்பம் பகுதியில் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெறாமல் போன குழப்பத்திற்கு நாங்களே பொறுப்பு ஏற்க தயாராக இருக்கின்றோம் என நெடுஞ்சாலை துறையினர் பொறுப்பேற்றுக் கொள்வார்களா?

நெல்லிக்குப்பம் சாவடி பெட்ரோல் பங்க் அருகில் இருந்த பிள்ளையார் கோவிலை இடித்த நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் ஏன் லைப்ரரி அருகே உள்ள பிள்ளையார் கோவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அகற்று மறுக்கிறீர்கள்?

நெல்லிக்குப்பம் கடலூர் செல்லக்கூடிய பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பில் உள்ள பிள்ளையார் கோவிலை இடிக்க ஏன் மறுக்கிறீர்கள்.?

திரௌபதி அம்மன் கோவில் இடமான பள்ளிகூட தெருவில் உள்ள காலி இடத்தை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய ஏன் மறுக்கிறீர்கள்?

மீண்டும் அங்கே கடை வைக்க அனுமதி அளித்தது யார்?

நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக கடை வைத்திருக்கும் தனிநபர் சாலை 7.5மீட்டர் போதும் என்று எந்த அடிப்படையில் பத்திரிக்கையில் செய்தி வெளியிடுகிறார்.

நெல்லிக்குப்பம் போஸ்ட் ஆபிஸ் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ராமலிங்க சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான சுமார் 2860சதுர பரப்பளவு உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை ஏன் அகற்ற மறுக்கிறீர்கள்?

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கூடிய அரசு அளித்த ஆதாரங்களின் நகல்களை சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் அவர்களிடம் நம்ம நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பினர் வழங்கினர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாகவும் மக்களின் பயன்பாட்டுக்கு சாலையை அகலப்படுத்த கூட்டமைப்பினருடன் ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதியளித்தார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended