• முகப்பு
  • குற்றம்
  • பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது.

பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது.

ஆர் தீனதயாளன் 

UPDATED: May 25, 2023, 7:44:32 PM

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சதாசிவம் என்ற தனிநபர் ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக குடிசை வீடு கட்டி குடியிருந்து வந்த நிலையில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கியும்,

அப்புறப்படுத்தாததால் உரிய கால அவகாசத்திற்கு பின்னர், பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சக்திவேல், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்ட் பூரணி, முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோவில் நிலம் மீட்கப்பட்டது.

மேலும் மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ. 95,83 ,200/  என்பது குறிப்பிடத்தக்கது. மீட்பு பணியின் போது துணை வட்டாச்சியர் விவேகானந்தன், கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, இன்ஸ்பெக்டர்கள் வனிதா, கிரேசி, சப் இன்ஸ்பெக்டர்கள், குமார் , கோவிந்தராஜன், முத்துகிருஷ்ணன். கோவில் எழுத்தர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended