• முகப்பு
  • கல்வி
  • கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறையினர் " விஞ்ஞான் 2023. "நிகழ்ச்சி கோலாகலம்.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறையினர் " விஞ்ஞான் 2023. "நிகழ்ச்சி கோலாகலம்.

மாமுஜெயக்குமார்

UPDATED: Mar 18, 2023, 11:17:13 AM

 

கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை  அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பாக 
" விஞ்ஞான் - 2023 " நிகழ்ச்சி ஏற்பாடு  செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், பிறக்கல்லூரி மாணவர்- மாணவியருக்களுக்கான ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், வினா விடை, ஓவியம், புகைப்படம் குறும்படம்  உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
       

போட்டிகளில் இரு நூறுக்கும் அதிகமான போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துறைப்பேராசிரியபெருமக்கள், மாணவர்- மாணவியர்கள் முன்னின்று கவனித்துக் கொண்டனர்.

போட்டிகளில் வெற்றிப் பெற்று முதலாம் இரண்டாம் இடங்களை கைப்பற்றிய மாணவர் மாணவியருக்கு பரிசுத் தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 

அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரிக்கு வெற்றிக் கோப்பை பரிசாக அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், முன்னதாக துறைத்தலைவர் முனைவர் எஸ் பூங்குழலி அனைவரையும் வரவேற்றார்.  நிகழ்விற்கு தலைமை தாங்கிய கல்லூரி முதல்வர்  செயலர் பி எல் சிவகுமார் மாணவர் - மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி தனது வாழ்த்துகளை தெரிவித்து சிறப்பித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended