• முகப்பு
  • அரசியல்
  • மணப்பாறையில் பாஜக அரசை  அகற்றுவோம் இந்தியாவை பாதுகாப்போம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடைபயண பிரச்சாரம்.

மணப்பாறையில் பாஜக அரசை  அகற்றுவோம் இந்தியாவை பாதுகாப்போம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடைபயண பிரச்சாரம்.

மகேந்திரன்

UPDATED: May 18, 2023, 6:41:30 PM

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகில் பாஜக அரசை   அகற்றுவோம் இந்தியாவை பாதுகாப்போம் என்கின்ற முழக்கத்தோடு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய நடைபயண  பிரச்சார இயக்கம்  நடைபெற்றது.

இந்த இயக்கத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் தலைமை வகித்தார் நகர துணை செயலாளர் மரியராஜ் மாவட்ட குழு உறுப்பினர்கள் ரஹ்மத்துனிச நல்லுசாமி முன்னிலை வகித்தனர்.

மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது சிறப்புரை உரை நிகழ்த்தி நடைபயண பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

 கோவில்பட்டி சாலையில் பொது மக்களிடம்  புதிய கல்விக் கொள்கை தொழிலாளர் சட்ட திருத்தம் வேளாண் சட்டம் மின்சார திருத்த சட்டம் வனப்பாதுகாப்பு சட்டம் மோட்டார் வாகன சட்டம் மத்திய உணவு பாதுகாப்பு சட்டம் என்று மக்களை ஏமாற்றி கார்பரேட்டுகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் விசுவாசம் காட்டும் பாஜக அரசை அகற்றிடுவோம்.

நாட்டின் சொத்துக்களான பொது துறைகளையும் விமான நிலையம் துறைமுகங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் பாஜக அரசை அகற்றிடுவோம்.

உணவுப் பொருட்களில்  கூட ஜிஎஸ்டி வரி விதிப்பு இதனால் விலைவாசி உயர்வு நடுத்தர தொழில் நசிவு பண மதிப்பிழப்பு மூலம் ஏழை எளிய நடுத்தர மக்களின் சேமிப்புகளை சுரண்டிய பாஜக அரசை அகற்றிடுவோம்.

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு என ஒவ்வொரு இந்திய குடிமகன் தலை மீதும் ஒரு லட்சம் கடன் வாங்கி வைத்திருக்கும் பாஜக அரசை அகற்றிடுவோம் என்ற துண்டு பிரசுரத்தை விநியோகம் செய்தனர.

VIDEOS

RELATED NEWS

Recommended