Author: இடும்பன்
Category: குற்றம்
பண்ருட்டி எல்.என்.புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இங்கு பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகரை சேர்ந்த சக்கரபாணி மகன் சுப்பிரமணியன் (31) மெக்கானிக்காக பணி செய்து வந்தார்.
இவர் கடந்த 10 வருடங்களாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெளியில் சென்று பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த 22-ந்தேதி விழுப்புரம் மார்க்கெட்டு பின்புறம் அழைத்து சென்று அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இளம்பெண்ணுக்கு தாலி கட்டினார்.
அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து பண்ருட்டி எல்.என். புரம் மின்வாரிய அலுவலகம் அருகில் இறக்கி விட்டு விட்டு உன்னுடன் வாழ எனக்கு விருப்பமில்லை நான் கடலூரில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி சென்று விட்டார்.
திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்ருட்டி மகளிர் போலீசில் இளம்பெண் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.
Tags:
#Cuddalorenews , #cuddalorenewstoday , #cuddalorenewstodaylive , #srimushnamnews , #panrutinews #panrutitodaynews #panrutitodaytamilnews #srimushnamlatestnews , #srimushnamtodaynews , #cuddalorenewsyesterday , #cuddalorenewsintamil , #cuddalorenewspapertoday , #இன்றையசெய்திகள்கடலூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalcuddalore , #todaynewscuddaloretamilnadu ,#Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday