மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் 25 வருட பூர்த்தியை நிகழ்வு

அஷ்ரப் ஏ சமட்

UPDATED: Mar 12, 2024, 1:42:50 PM

தெஹிவளையில் உள்ள மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் 25 வருட பூர்த்தியை நிகழ்வும் 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு நிகழ்வும் இக் கல்லுாாியின் தலைவர் கல்முனையின் முன்னாள் மேயருமான கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் தலைமையில் கொழும்பு 7 தாமரைத் தடாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த, வெளிநாட்டு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரனி அலி சப்றி, சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஸ் பத்திரன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், முன்னால் வெளிநாட்டு அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் ஆகியோரும்

Also Read : வலம்புரி கவிதா வட்டத்தின் 97 ஆவது கவியரங்கு

சவுதி அரேபியா, பிரான்ஸ் ,நேபாளம் கனடா, பங்களதேஸ், துருக்கி, மற்றும் அமெரிக்காவின் கிரைன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ட க்டர் இஸ்மத் இஸ்நியல் மற்றும் இப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி அப்ரா சிராஜ் டாக்டர் ரபீக் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, சவுதி அரேபிய தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

அத்துடன் அமைச்சர்கள், மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ரவூப் ஹக்கீம் சவுதி அரேபியா,நேபால் பிரான்ஸ் துருக்கித் தூதுவர்களும் விசேட உரைகளையும் நிகழ்த்தினார்கள். பட்டமளிப்பு விழாவில் கல்வி கற்று வெளியேறிய 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

Also Read : மலையக வரிய மக்களுக்கு இவ்வாரான உதவிகள் தேவை

இந்த பட்டமளிப்பு வைபவத்தில் 10 கலாநிதிகள் தமது கலாநிதிப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர் அத்துடன் டிப்ளோமா, உயர்தர டிப்ளோமா, ஆங்கிலம்,ஆசிரிய பயிற்சி கற்கை டிப்ளோமா,நில அளவியல், கணனித்துறை, ஆங்கிலப் பி.ஏ பட்டம், , பி.எஸ்.சி பொறியியல், கனனி பொறியில் , முகாமைத்துவம், வர்த்தகம், சந்தைப்படுத்தல், சுற்றுலாத்துறை, கணக்கியல் முதுநிலை பட்டப் படிப்பு விஞ்ஞானம்,ஆங்கிலம் வர்த்தக முகாமைத்துவம் உடன் கலாநிதிப் பட்டங்களும் பிரதம அதிதிகளினால் பட்டங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது .

 அத்துடன் அதிவிசேட திறமையைக் கொண்ட பட்டதாரி மாணவி ஒருவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி வைக்கப்பட்டது 

Also Read : கொழும்பில் இடம்பெற்ற Blood for Humanity இரத்த தான முகாம்

இங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த  

சிராஸ் மீராசாஹிப் இந்த நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 25 வருட காலமாக பாரிய உயர்கல்விச் சேவையை செய்து வருகின்றார். குறிப்பாக ஆசிரியர் துறையில் பல பட்டங்களையும் அவரது கல்லுாாி பயிற்சியளித்து டிப்ளோமா, பட்டம் வழங்கி வருகிறது.

 எமது கல்வியமைச்சு ஆசிரியகளை பயிற்சி அளிப்பதற்காக ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக மொன்றை நிறுவுவதற்கு தற்போது தான் நாங்கள் ஆரம்பித்து இருக்கின்றது. ஆனால் 25 வருடத்திற்கு முன்பே இத்துறையில் அவர் பல ஆசிரியைகளை இத்துறையில் கற்பதற்கு வசதி செய்து கொடுத்துள்ளார்.

.அத்துடன் அமெரிக்கா , இங்கிலாந்து போன்ற நாடுகளில் இணைப் பல்கலைக்கழகமாகும், கல்வியமைச்சின் தொலைக் கல்வி திணைக்களத்துடன் பதிந்து அனுமதியுடன் இக் கல்லூரி தெஹிவளை, கல்முனை மாலைதீவு போன்ற கல்வி நிலையங்கள் ஊடாக கல்வியை போதித்து வருகின்றமையிட்டு நான் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இந்த நாட்டில் மேற்கொண்டு வரும் கல்விச் சேவையை நான் பாராட்டுகிறேன். எனத் தெரிவித்தார்.

Also Read :மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிழக்கிலும் திட்டம்

அத்துடன் இப் பல்கலைக்கழகத்தில் 10 கலாநிதிகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மேற்கொண்டமையும் விசேட அம்சமாகும். இலங்கையில் அரசாங்கம் 17 பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளது. வருடா வருடம் உயர்தரம் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கு உயர் கல்வி அனுமதி வழங்க முடியாதுள்ளது ஆகவே தான் இவ்வாறான ஆங்கில மொழி மூலமான கல்லுாாிகளில் மாணவர்கள் பயின்று உள்நாாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில் பெறுவதற்கு நல்லதொரு சர்ந்தப்பமாகும்.


எமது நாட்டின் கல்வித் தரம் உலகில் மிக முதல் தரத்தில் நீண்டகாலமாக நிலைத்து வருகின்றது.. அதற்காக எமது கல்விக்க்காக வித்திட்ட கன்னங்கரா போன்ற கல்வியியலாளர்கள் முன்னோர்கள் எமக்கு செய்து வைத்துச் சென்ற முன் உதாரணங்களாகும் எனவும் கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜய்ந்த அங்கு உரையாற்றினார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended