பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

ஆர்.தீனதயாளன் 

UPDATED: May 8, 2023, 6:50:17 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பங்களா தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியூமாக காணப்படுகிறது.

சம்பந்தப்பட்ட சாலையை சீரமைக்க கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கைகள் வைத்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 

கும்பகோணம் இருந்து திருவையாறு செல்லும் கபிஸ்தலம் சாலை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தது கவிஸ்தலம் போலீசார் மற்றும் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற அதிகாரிகள் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended