• முகப்பு
  • Sports
  • மாவட்ட அளவிலான மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி ‘சாம்பியன்’ பட்டம்.

மாவட்ட அளவிலான மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி ‘சாம்பியன்’ பட்டம்.

மாமுஜெயக்குமார்

UPDATED: Feb 24, 2023, 1:46:36 PM

 

கோவையில் முதல் முறையாக நடைபெற்ற மாவட்ட அளவிலான மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், கோவை மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி, கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 

போட்டியில், இந்திய அளவில் புகழ்பெற்ற கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டுவரும் ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவியர்கள் அணி களம் கண்டு வந்தனர். பல்வேறு போட்டியிகளில் பல மாவட்ட அணிகளை பின்னுக்கு தள்ளி முன்னேறி வந்த நிலையில்,

இறுதிப் போட்டியில், கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை- அறிவியல் கல்லூரி, நிர்மலா மகளிர் கல்லூரி அணிகள் களம் கண்டு மோதின.


டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை - அறிவியல் கல்லூரி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. சிறப்பாக பேட்டிங் செய்த யாழினி மருதாச்சலம் அதிகபட்சமாக 56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் குவித்தார். இதேபோல் பி.சந்தியா 56 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார்.  

182 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நிர்மலா மகளிர் கல்லூரி அணி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை- அறிவியல் கல்லூரி அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

அபாரமாக பந்து வீசிய, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை - அறிவியல் கல்லூரி மாணவி எஸ்.ஆல்பெர்டின் கிரனாப், 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை - அறிவியல் கல்லூரி அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

மாணவி யாழினி மருதாச்சலம் இப்போட்டியில் சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டார்.

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை - அறிவியல் கல்லூரி மகளிர் அணியினரை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்,கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் டி.லட்சுமி நாராயணசுவாமி பாராட்டினார். இதே போல் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை - அறிவியல் கல்லூரி முதல்வர் - செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார்,

உடற்கல்வி இயக்குநர் முனைவர் கே.வடிவேலு, வி.சுதா,பேராசிரிய பெருமக்கள், கல்லூரி மாணவர் - மாணவியர்கள், பெற்றோர்கள், கல்வித்துறையினர், விளையாட்டு-சமூக ஆர்வலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டி மகிழ்ந்த வண்ணமாய் உள்ளனர்.

 

 

VIDEOS

RELATED NEWS

Recommended