தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றும் சிறப்பு திட்டம்.

சுரேஷ்பாபு

UPDATED: Sep 25, 2023, 7:31:23 PM

திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை வட்டாரம், மகான்காளிகாபுரம் கிராமத்தில்  தமிழக முதலமைச்சர் அவர்களின் தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றும் சிறப்பு திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ்

2021-22 ஆம் நிதி ஆண்டில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 13.16 ஏக்கர் பரப்பளவில் உள்ள தரிசு நிலத் தொகுப்பில் தோட்டக்கலை துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர் பாசன அமைப்பு மற்றும்

நடவு செய்யப்பட்டுள்ள மா மற்றும் கொய்யா பழச் செடிகள் அடங்கிய ஏழு விவசாயிகளின் வயல்களை  திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன்  பார்வையிட்டு விவசாயிகளிடம் கலந்துரையாடி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத் துணை இயக்குனர் .ஐ.ஜெபக்குமாரி அனி அவர்கள் தோட்டக்கலை துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் தரிசு நிலத் தொகுப்பில் தோட்டக்கலைத் துறையின் முக்கிய பங்கு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த ஆய்வில் ஆர்கே பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மணிகண்டன், தோட்டக்கலை அலுவலர் ஜெகதீஸ்வரி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அன்பழகன் சிவபாரதி, விவசாயிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended