ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவ உச்சி மாநாடு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 10, 2024, 8:41:31 AM

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புபின் பிரதிநிதித்துவ உச்சி மாநாடு  கொழும்பு 7, தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் கட்சியின் பிரதித் தலைவர் தோழர் அக்பர் அலி(நாசார் ஹாஜி) தலைமையில் நடைபெற்றது.  

கட் சியின் பொருளாளரும்  முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கலீலுர்ரஹ்மான்  கட்சியின் கணக்கு அறிக்கையை சமர்ப்பித்து கொழும்பில் தேர்தல் வாக்கு மூலம் ஜனநாயக ரீதியில் பேரம் பேசி எமது உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பது என கூடியிருந்த கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கி உரை நிகழ்த்தினார்.

Also Read : அதிக குடி பல லட்சத்தை பறி கொடுத்தது

  கட்சியின் செயலாளர்  முன்னாள் அமைச்சர் ஹசன் அலி  செயலாளர் அறிக்கையை சமர்ப்பித்து உரையும் நிகழ்த்தினார்.

 மௌலவி சபீர்  இஸ்லாமிய அரசியல் என்ர தொனியில் உரை நிகழ்த்தினார்கள்.

Also Read : மக்கள் தொடர்பில் பேசுவதற்கு எமக்கு உரிமையில்லையா பிரதமர் இடத்தில்

கல்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்  ஹிஸாம், கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான காதர் மற்றும் முஸம்மில் மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹரீப் மற்றும் பாயிஸ் ஆகியோர் கட்சியின் தலைமை மற்றும் உச்ச சபையில் இணைந்தனர்.



Also Read :புத்தளத்தில் ஈரான் கலாச்சார கண்காட்சியும் திரைப்பட விழாவும்

VIDEOS

RELATED NEWS

Recommended