• முகப்பு
  • கல்வி
  • புதிய பொலிவு பெறும் பூந்தமல்லி சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி.

புதிய பொலிவு பெறும் பூந்தமல்லி சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி.

பா. கணேசன்

UPDATED: May 16, 2023, 7:46:49 PM

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டத்தில் உள்ள சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஏற்கனவே குட்டை பள்ளி என மக்கள் அழைப்பார்கள். காரணம் அது சென்ற காலங்களில் குட்டையாக காட்சியளித்தது. 

ஐந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து இந்த பள்ளி அருகில் நின்று செல்லும். இந்த பள்ளி பிரதான சாலையில் இருந்தாலும் இதுவரை அந்த பள்ளிக்கு முகப்பில் பெயர்பலகை கூட கிடையாது.

இதனால் பள்ளி இருக்கும் இடமே தெரியாததால் இப்பள்ளியை தாண்டியுள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை சேர்க்கிறார்கள்.

ஏற்கனவே இதை நமது தி கிரேட் இந்தியா நியூஸ் செய்தியாக வெளியிட்டிருந்தது. தற்போது புதியதாக வந்துள்ள தலைமை ஆசிரியர் பூபாலமுருகன் என்பவர் பள்ளியின் வளர்ச்சிக்கு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தற்போது சென்னீர்குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளி புது பொலிவு அடைந்து வருவதால் பெற்றோர்களும், மாணவர்களும் மகிழ்ச்சியடைந்து தலைமை ஆசிரியரை பாராட்டுகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended