Author: மேலப்பாளையம் ஹஸன்
Category: மாவட்டச் செய்தி
திருநெல்வேலியை அடுத்துள்ள ராமையன்பட்டி கிராமத்தில், திருநெல்வேலி- சங்கரன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது.
நெல்லை மாநகராட்சியின் நான்கு மண்டலங்களான திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால், தினசரி சேகரிக்கப்பட்டு வரும், டன் கணக்கிலான குப்பைகள், அவ்வப்போது ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில், கொட்டப்படுகின்றன.
இந்நிலையில், ராமையன்பட்டி குப்பைக்கிடங்கை யொட்டி, கேரள மாநிலத்தை சேர்ந்த நஜ்மல் என்பவர், குப்பைகளில் இருந்து, நாய்களுக்கு பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை, சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பில், கட்டி வருகின்றார்.
இந்த தொழிற்சாலையின் கட்டுமான பணிகளில், உள்ளூர் தொழிலாளர்களுடன், ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.
அவர்களுள் ஒருவரான, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த, ராம் நயன் (வயது.21) என்பவர், இன்று (மே.25) மதியம் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென கிரேன் அறுந்து விழுந்தது.
கிரேனுக்கு அடியில் சிக்கிய ராம்நயன், சம்பவ இடத்திலேயே, பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே ராமையன்பட்டியில் கட்டப்பட்டு வரும் நாய் பிஸ்கட் தொழிற்சாலை, உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி, மின்வாரிய அனுமதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்ளிட்ட எந்தவொரு அனுமதியையும், எந்த நிறுவனத்திடம் இருந்தும் பெறவில்லை! என, காவல்துறை விசாரணையில், தெரியவந்தது.
எனினும், இந்த துயர சம்பவம் குறித்து, மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கிரேன் அறுந்து விழுந்து, வடமாநில தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம், அந்தப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
#tirunelvelinews #accident #tirunelvelinews , #tirunelvelinewstamil , #tirunelvelinewspaper , #tirunelvelinewschannel , #tirunelvelinewsyesterday , #tirunelvelinewslive , #tirunelvelimavattamnews , #இன்றையசெய்திகள்திருநெல்வேலி , #இன்றையமுக்கியசெய்திகள்திருநெல்வேலி , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltirunelvelitamilnadu , #indrayaseithigaltirunelveli , #todaynewstirunelveli , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #tirunelvelitodaynews , #tirunelvelilatestnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews