Author: பிலிப்ராஜ் ரவி
Category: மாவட்டச் செய்தி
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவை ஒட்டி சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி கடந்த கடந்த 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த கண்காட்சியை ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர் தினமும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.
இதன் விளைவாக தாவரவியல் பூங்கா பெரிய புல்வெளி மைதானம் நுழைவு வாயில் என பல்வேறு இடங்களில் அதிகமாக குப்பைகள் தேங்கி கிடந்தது.
இந்நிலையில் உதகை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் மகாராஜன் தலைமையில் தூய்மை பணியில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது சுற்றுலா பயணிகள் காலை 7 மணி முதல் பூங்காவிற்கு வருகை தருகிறார்கள்.
அதற்கு முன்பே தூய்மை பணியாளர்கள் மூலம் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்த ஐந்து நாட்களும் குப்பைகள் அகற்றப்பட்டது.
மேலும் நாள் முழுவதும் அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டனர், அதன்படி ஐந்து நாட்களில் தாவரவியல் பூங்காவில் குப்பைகள் ஏறக்குறைய 40 டன் அகற்றப்பட்டது.
நகராட்சியில் தினமும் 35 டன் குப்பைகள் சேகரமாகும் நிலையில் கோடை சீசன் என்பதால் தற்போது 50 டன் குப்பைகள் சேகரமாகிறது என்றனர்.
இந்த துரித செயல்பாட்டை சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் உள்ளூர் வாசிகளும் பாராட்டு தெரிவித்தனர்.
Tags:
#nilgirinews #nilgirisnews #nilgiristodaynews #nilgirislatestnews #nilgirisflowerexhibition #flowersexhibition #flowers #Garbage