• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை வலியுறுத்தி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 20 பேருக்கு தையல் இயந்திரங்கள் ஆட்சியர் வழங்கினார். 

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை வலியுறுத்தி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 20 பேருக்கு தையல் இயந்திரங்கள் ஆட்சியர் வழங்கினார். 

சுரேஷ்பாபு

UPDATED: Sep 25, 2023, 7:38:50 PM

திருவள்ளூர்,  செப். 26: தமிழ்நாடு அரசு  சட்டசபையில் 'பிளாஸ்டிக்களுக்கு எதிரான மக்கள் பிரச்சாரம்” செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்குதாரக்களை அழைத்து இது குறித்து பொதுமக்களிடையே பிரச்சாரம் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது.

இதற்கிடையில் தமிழ்நாடு முதலமைச்சர்  23.12.2021 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் "மீண்டும் மஞ்சப்பை" என்ற மக்கள் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் "மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் பற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் நடத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையொட்டி  மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் தொழிற்சாலைகள் நிதியுதவியுடன் 6 மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் பெறப்பட்டன. இந்த மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் ரூ. 10 செலுத்தி ஒரு மஞ்சப்பையை பெற்றுக்கொள்ளலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக உள்ள மஞ்சப்பை உபயோகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதன் முறையாக மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும்,

தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்திலும், திருவள்ளூர் பேருந்து நிலையத்திலும் மற்றும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலிலும் நிறுவப்பட்டு மஞ்சப்பை விற்பனை இயந்திரம் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் மஞ்சப்பை இயந்திரங்களுக்கு தொடர்ச்சியாக தேவைப்படும் மஞ்சப்பைகளை தைப்பதற்கு முதல் கட்டமாக 10 தையல் இயந்திரதங்களை தனியார் நிறுவன பங்களிப்பின் மூலம் மாவட்டகலெக்டரின் அறிவுறுத்தலின் படி தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது.

மேலும், இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக 20 தையல் இயந்திரகங்களை 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு தனியார் நிறுவன பங்களிப்பின் மூலம் திருவள்ளூர் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலமாக பெறப்பட்டு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட வளாகத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கிஸ்  இலவசமாக பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பா.ரவிச்சந்திரன்,  உதவி பொறியாளர் சபரிநாதன் மற்றும் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended