• முகப்பு
  • குற்றம்
  • தடிக்காரகோணத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு!

தடிக்காரகோணத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு!

வாசுதேவன்

UPDATED: May 26, 2023, 2:00:26 PM

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட தடிக்காரகோணம் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தனி நபர் ஆக்கிரமித்து கடை கட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட தடிக்காரணம் ஊராட்சியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கடைகட்டி அதை அனுபவித்து வருகிறார்.

இதை அப்புறப்படுத்தி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த வேண்டும் என்று பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் அந்த தனி நபர் கட்டியுள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடையை அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கழிப்பிடம் கட்டித் தர வேண்டி நெடுஞ்சாலை துறை அலுவலரை நேரில் சந்தித்து ஒன்றிய கவுன்சிலர் மேரி ஜாய் மற்றும் ஞாலம் ஜெகதீஷ் கோரிக்கை மனு அளித்தனர். அவர்களுடன் சமூக ஆர்வலர்கள் இருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended