ஏரியில் மர்மமான முறையில் பெண் சடலம்.

நா.வேலாயுதம்

UPDATED: May 7, 2023, 3:01:17 PM

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் சாலவனூர் கிராமத்தில் ஏரியின் ஓரம் 100 நாள் வேலை செய்த பள்ளத்தில் மர்மமான முறையில் சரிவர புதைக்கப்படாத நிலையில் அடையாளம் தெரியாத நபர் சுமார் 23 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த தகவல் அறிந்த நிலையில் செஞ்சி டிஎஸ்பி நா.கவீன்னா நேரில் சென்று விசாரணை செய்த பின்னர் தடயவியல் நிபுணர் சண்முகம் உதவியுடன் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்விக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் கஞ்சனூர் ஆய்வாளர் கு.சேகர், உதவி ஆய்வாளர் க.பார்த்தசாரதி, அனந்தபுரம் உதவி ஆய்வாளர் இரா.நடராஜ், கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் ஆதிசக்தி சிவகுமாரி மன்னன், கஞ்சனூர் வருவாய் ஆய்வாளர் நாகராஜன், கிராம உதவியாளர் E.எட்டியான் ஆகியோர் உடன் இருந்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் கருநீள நிற சுடிதார் ரோஸ் நிற லெக்கின்ஸ் அணிந்திருந்தார் இடது கையில் பச்சை குத்தி இருக்கிறார்.

VIDEOS

RELATED NEWS

Recommended