• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருச்சியில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா படத்திற்கு பால் தெளித்து, சங்கு ஊதி, மேளம் அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்.

திருச்சியில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா படத்திற்கு பால் தெளித்து, சங்கு ஊதி, மேளம் அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்.

JK 

UPDATED: Sep 27, 2023, 9:50:49 AM

திருச்சி சிந்தாமணி அண்ணா சாலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 55நாட்களாக விவசாயிகளின் விலை பொருட்களுக்கு இரட்டிப்பான விலை வழங்க வேண்டும், நெல் மற்றும் கரும்புக்கு அதிகப்படியான விலை வழங்க வேண்டும்,

மேகதாட்டு அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என கூறி கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் நடந்த பந்தின் போது தமிழக முதல்வரின் உருவப் படத்து வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி ஒப்பாரி வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை கண்டித்து நேற்று விவசாயிகள் கர்நாடக முதல்வரின் படத்தை வைத்து இறுதிச் சடங்கு செய்து போராட்டம் நடத்தினர்.

56வது நாளாக இன்று இறுதிச் சடங்கு நேற்று செய்தது தொடர்ந்து கர்நாடகா முதல்வர் சீதாராமையா படத்திற்கு முன்பாக பாலை தெளித்து, சங்கு ஊதி, மேளம் அடித்து தமிழகத்திற்கு தண்ணீர் விடாமல் கர்நாடகா முதல்வர் நீங்கள் இறந்து விட்டீர்களே என்று ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended