• முகப்பு
  • அரசியல்
  • பத்தாவது வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தூத்துக்குடி மாவட்ட மாணவரின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய கனிமொழி கருணாநிதி.

பத்தாவது வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தூத்துக்குடி மாவட்ட மாணவரின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய கனிமொழி கருணாநிதி.

மாரிமுத்து

UPDATED: May 26, 2023, 12:17:09 PM

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த மாணவர் அர்ஜூன பிரபாகரன். 10ஆம் வகுப்பு வெளியான பொதுத்தேர்வு முடிவில் மாணவனின் அர்ஜூன பிரபாகரன் 495 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

அப்பா மாணிக்கவாசகம், இவரது மனைவி பண்டாரச் செல்வி. இவர்களது மகன் அர்ஜூன பிரபாகரன். அர்ஜூன பிரபாகரன், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள நூறாண்டு பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் பள்ளியான, மதிதா இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மாணவன் அர்ஜூன பிரபாகரனின் தந்தை மாணிக்க வாசகம் உயிரிழந்துவிட்டார். இதனால் வீட்டில் வறுமை சூழ்ந்து கொண்டது.

கணவனை இழந்த நிலையில் எப்படியாவது தனது மகனை படிக்க வேண்டும் என பண்டாரச்செல்வி ஆசைப்பட்டுள்ளார். அதேபோல் மாணவனின் நிலைமையை அறிந்த பள்ளி நிர்வாகமும் அவனுக்கு பல்வேறு உதவிகளை செய்தனர்.

கடந்த திங்கள்கிழமை (22/05/2023) தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் அருகிலுள்ள அகரம் பகுதியில் நிகழ்ச்சிக்குச் சென்ற கனிமொழி எம்.பி அவர்களை மாணவன் அர்ஜூன பிரபாகரன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாணவன் அர்ஜூன பிரபாகரன் தனக்கு மூக்குக் கண்ணாடியும் மற்றும் தங்கள் வசிப்பது வாடகை வீடு என்றும், புதிதாக பட்டா நிலம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்று (26/05/2023) தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் 10ஆம் வகுப்பில் 495 மதிப்பெண்கள் எடுத்து மாணவன் அர்ஜூன பிரபாகரனுக்கு புதிய மூக்குக் கண்ணாடி மற்றும் இரண்டு சென்ட் நிலத்திற்கான பட்டா வழங்கினர்.

அர்ஜூன பிரபாகரன் மேன்மேலும் படித்து வாழ்க்கையில் வெற்றி பெறக் கனிமொழி எம்.பி அறிவுரைகூறி, வாழ்த்தினர்.

இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended