Author: கல்முனை - யு. எம். இஸ்ஹாக்

Category: இலங்கை

கிழக்கு மாகாண கடற்கரை பிரதேசத்தைச் தூய்மையான பிரதேசமாக மாற்றும் வேலைதிட்டம் கிழக்கு மாகாண ஆளுனரினால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை அமுல் படுத்த கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் கரையோரப்பிரதேச உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. இவ்வேலை திட்டம் நாளை (27) உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

கிழக்கு ஆளுநரின் இந்த செயற்றிட்டதின் கீழ் கல்முனை பிரதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் பணிகள் மாநகர ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி தலைமையில் கல்முனை வாடிவீட்டு வீதி முனையில் காலை 7.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

ஆளுநரின் இந்த வேலைத்திட்டத்தில் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச். எம். எம். ஹரீஸ் உட்பட மாநகர சபை அதிகாரிகளும் உத்தியோகத் தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Tags:

#srilankalivenews, #srilankanewsintamil, #srilankanews, #srilankanews , #, #agadhigal #srilankaagadhigal #இன்றையசெய்திகள்உலகம் , #இன்றையமுக்கியசெய்திகள்உலகம் , #இன்றையதலைப்புசெய்திகள்உலகம் , #indrayaseithigalsrilanka , #indrayaseithigal , #todaynewssrilanka , #worldnewstoday , #worldnewsinenglish , #worldnewslive , #worldnewstodayheadlines , #worldnewstoday2023 , #worldnewslatest , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv ,  #Tamilnewsdaily , #Districtnews , #indianewslive , #worldnewstamil , #worldnews , #worldnewsintamiltoday , #worldnewstodayintamil
Comments & Conversations - 0