• முகப்பு
  • இலங்கை
  • காணாமல் போனதாக கூறப்பட்ட ஜெர்மன் பிறஜை விடுதி திரும்பினார்

காணாமல் போனதாக கூறப்பட்ட ஜெர்மன் பிறஜை விடுதி திரும்பினார்

பதுளை - ராமு தனராஜா 

UPDATED: Feb 15, 2024, 3:24:41 AM

ஹப்புத்தளை விகாரகலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி இருந்து உடற்பயிற்சிக்காக வெளியே சென்றிருந்த 63 வயதுடைய ஜேர்மன் நாட்டு பிரஜை மீண்டும் இன்று அதிகாலை விடுதிக்கு வந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். 

ஹப்புத்தளை விகாரகலை பகுதியில் தனது மனைவியுடன் விடுதி ஒன்றில் தங்கி இருந்த மேற்குறிப்பிட்ட வெளிநாட்டு பிரஜை உடற்பயிற்சிக்காக நேற்று பிற்பகல் வெளியே சென்று விடுதிக்கு திரும்பவில்லை என ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

Read Also :வீடமைப்பு அதிகார சபை பிரதிநிதிகள் வடக்கு விஜயம்

பின்னர் ஹப்புத்தளை பொலிஸாரும் இராணுவத்தினரும் இனைந்து நேற்று இரவு சுமார் 12.00 மணிவரை பொலிஸாரும் முப்படையினரும் தேடுதலை மேற்கொண்ட போது குறித்த வெளிநாட்டு பிரஜை தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை எனவும் எனவே அதிகாலை

மீண்டும் தேடுதலை மேற்கொள்ள இருந்த நிலையிலேயே இன்று அதிகாலை அவர் விடுதிக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Also Read :பொருளாதார மாற்றத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதற்கு உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியம்

குறித்த வெளிநாட்டு பிரஜையிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது உடற்பயிற்சிக்காக வெளியே சென்றபோது வழி தவறி சென்றதாக தெரிவித்துள்ளார். 

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended