வீடமைப்பு அதிகார சபை பிரதிநிதிகள் வடக்கு விஜயம்
அஷ்ரப் ஏ சமத்
UPDATED: Feb 14, 2024, 9:26:26 AM
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரனி ரஜிவ் சூரியாராச்சி மற்றும் பொது முகாமையாளர் பொறியியலாளர் எம். ஜானக்க தலைமையிலான குழு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு . அனுராதபுரம் ஆகிய மாவட்ட தேசிய வீடமைப்பு அலுவலகங்களுக்கு சென்று அங்கு பல்வேறு வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 106 குடும்பங்கள் வீட்டுரிமை பத்திரங்கள் வழங்கப்பட்டதுடன் மேலும் வீடற்ற யாழ் வாழ் 20 குடும்பங்களுக்கு தமது காணியில் வீடுகளை நிர்மாணிக்கும் கொள்ள வீடமைப்புக் கடன் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் தேசிய வீடமைப்பு பிரதித் தலைவர், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பிரதிப் பொது முகாமையாளர்கள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் களும் கலந்து கொண்டனர் அத்துடன் இக் குழு முல்லைத்தீவு மாவட்ட வீடமைப்புக் அலுவலகத்திற்கு விஜயம் செய்து அங்கு கடமை புரியும் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களின் பதவி உயர்வு ,நிரந்தரமாக்கல் போன்ற விடயங்களுடன் மாவட்டத்தில் மேற்கொள்கின்ற எதிர்கால வீடமைப்புத் திட்டங்கள் அமல்படுத்தவும் மாவட்ட முகாமையாளர்கள் ஊழியர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதே வேளை அனுராதபுர வீடமைப்பு அலுவலகம் ஊடாக 46 குடும்பங்களுக்கு வீட்டுரிமை பத்திரம் வீடற்ற 115 குடும்பங்களுக்கு தத்தமது கானியில் வீடுகளை நிர்மாணிக்க வென வீடமைப்புக் கடன் வழங்கி வைக்கப்பட்டன.