கும்மிடிப்பூண்டியில் இருந்து வேல்ஸ் மருத்துவமனைக்கு இலவச பேருந்து சேவை.

L.குமார்

UPDATED: May 17, 2023, 8:44:29 PM

திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட மஞ்சங்கரணையில் பிரபல வேல்ஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது.

இப்பகுதிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மஞ்சங்கரணை வரையில் தினமும் காலை 08:40 மணிக்கு பொது நோயாளிகளை இலவசமாக ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து செல்ல,

இலவச பேருந்து துவக்க விழாவை கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் ஷகிலா அறிவழகன், கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி,துணைத் தலைவர் கேசவன், வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சி.இ.ஓ . ஹரிகிருஷ்ணபாபு, உதவி மருத்துவ ஆய்வாளர் சதீஷ்தேவ், பொது மேலாளர் சிவநாதன்,

டி.எஸ்.ஓ.பிரியா சத்யா, விற்பனை மேலாளர், ஜானகிராமன், பி.ஆர்.ஓ.பாலாஜி, சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு‌ மக்கள் பயன்பாட்டிற்கு இலவச பேருந்து பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இதில் சுப்பு லட்சுமணன் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended