• முகப்பு
  • அரசியல்
  • திருவள்ளூரில் எடப்பாடி பழனிச்சாமி ஏன் 69 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருவள்ளூரில் எடப்பாடி பழனிச்சாமி ஏன் 69 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

L.குமார்

UPDATED: May 12, 2023, 12:50:32 PM

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர் கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 69 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்சிகள் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் ஆலோசனையின்படி நாலூரில் மீஞ்சூர் ஒன்றியக் கழகச் செயலாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோன்று மீஞ்சூர் ஒன்றியம் மெதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல பட்டறை கிராமத்தில் மீஞ்சூர் ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் என். ஆறுமுகம் ஏற்பாட்டில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் எல்லையம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் உடன் இருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended