மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு. நடவடிக்கை எடுக்க தயாரான ஆணையர் மேயர்.

மாரிமுத்து

UPDATED: May 23, 2023, 1:59:33 PM

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு வல்லநாட்டிலிருந்து பைப் மூலம் குடிநீர் வந்து கொண்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கலியாவூர் ஆற்றுப்படுகையில் நீர் குறைந்ததை அடுத்து தூத்துக்குடி மாநகருக்கு வருகை தரும் குடிநீரின் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது.

இதனால் தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு குடிநீர் சப்ளை மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் தினேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களுடன் வல்லநாடு நீர் தேக்க நிலையத்திற்கும் கலியாவூர் ஆற்றுப்படுகைக்கும் சென்றனர்,

அப்போது அங்கு ஆற்றுப்படுகையில் தேங்கி இருக்கும் அமல செடிகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மணிமுத்தாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, தற்போது கோடை காலம் என்பதால் ஆற்று படுகையில் நீரின் அளவு கணிசமாக குறைந்துள்ளது.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு சில தினங்கள் பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் நாட்கள் குறையும் என்று தெரிய வருகிறது, தற்போது மாநகராட்சி குடிநீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 20 லிட்டர் தண்ணீர் கேன் அதிக அளவில் விற்பனை நடைபெறுகிறது.

மாநகராட்சி நிர்வாகம் வழங்கப்படுகின்ற தண்ணீர் கேன் தண்ணீர் சுகாதாரமானதாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

VIDEOS

RELATED NEWS

Recommended