• முகப்பு
  • அரசியல்
  • பாராளுமன்றத்தை பகிஸ்கரிப்பதா? சபாநாயகருக்கெதிரான வாக்கெடுப்பில் பங்கேற்பதா? தமிழர் கட்டமைப்பு அறிவிக்க வேண்டும்

பாராளுமன்றத்தை பகிஸ்கரிப்பதா? சபாநாயகருக்கெதிரான வாக்கெடுப்பில் பங்கேற்பதா? தமிழர் கட்டமைப்பு அறிவிக்க வேண்டும்

வவுனியா

UPDATED: Mar 18, 2024, 12:13:22 AM

வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யகோரி பாராளுமன்றத்தை பகிஸ்கரிக்க கூறும் தரப்பு சபாநாயருக்கு எதிரான விவாதத்தில் கலந்துகொள்ளாமல் விடுகின்றமை தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் தெரிவித்தார்.

Also Read :கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு பணி பாகிஸ்கரிப்புக்கு அழைப்பு

வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழர்களுக்கு எதிராக புதிது புதிதாக சட்டங்கள் இயற்றப்பட்டு கைது செய்யப்படுகின்ற நிலைமையே காணப்படுகிறது.இதுவே வெடுக்குநாறி விடயத்திலும் பொய் குற்றச்சாட்டுக்களை போட்டு அவர்களை இன்று சிறை வைத்திருக்கிறார்கள்.

Also Read : திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் காஜா மலை

 இவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை எமது நிலைப்பாடாக உள்ளது.

கட்டமைக்கப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்கின்ற ஒரு அமைப்பு பாராளுமன்றத்தை தமிழ் பிரதிநிதிகள் பகிஸ்கரிக்க வேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள். எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு கலந்துரையாடியதன் பிரகாரம் எமது கட்சி உறுப்பினர்களோடு கலந்துரையாடி அதற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றோம்.

 இது தொடர்பில் ஆறு திருமுருகன் அவர்களோடும் அகத்திகள் அடிகளாருடனும் இந்த முடிவுக்கு நாங்கள் சம்மதம் தெரிவித்து இருக்கிறோம்.

Also Read : மலையக தமிழர்" என பெயர் சூட்ட அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனினும் 19ஆம் 20 ஆம் திகதிகளில் நியாயப்பாடுகள் இல்லாமல் பக்கச் சார்பாக செயற்படுகின்ற சபாநாயகருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு வருகின்றது. இருபதாம் தேதி வாக்கெடுப்பு இடம்பெற இருக்கின்றது. ஆகவே இந்த பாராளுமன்ற அமர்வுக்கு செல்லாமல் பகிஸ்கரித்தால் விவாதத்திலும் கலந்து கொள்ள முடியாமல் போகும்.

 அங்கு எதிர்த்து வாக்களிக்க முடியாமல் போகும் நிலைமையும் உருவாகும் ஆகவே இது தொடர்பில் அழைப்பு விடுத்த கட்டமைப்பு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

 அதுக்கு அப்பால் ஜனாதிபதியை பாதுகாப்பதற்கும் இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதனை மூடி மறைப்பதற்கும் இலங்கை பொருளாதார நிலைமையில் இருந்து காப்பாற்றுவதாக கூறி ஐ எம் எப்க்காக அரசோடு ஒட்டியதுடன் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை என தெரிவித்து இதற்கு முன்பு செயற்படும் அமைப்புக்கள் இன்று இவர்கள் வெற்றி பேசுகிறது.

Also Read : பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

அவர்களது விடுதலையை சாத்தியமாக இருக்குமாக இருந்தால் அது தொடர்பாக நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை. இவர்களது விடுதலைக்கு யார் முயற்சி எடுத்தாலும் நாங்கள் அதற்கு தடையாக இருக்கப் போவதுமில்லை என தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended