• முகப்பு
  • இலங்கை
  • மாணவர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ பயிற்சி செயலமர்வுகள்

மாணவர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ பயிற்சி செயலமர்வுகள்

கல்முனை - யு. எம். இஸ்ஹாக்

UPDATED: May 26, 2023, 3:14:32 AM

UNDP இன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கல்முனை கல்வி வலயத்தில் அனர்த்த முகாமைத்துவத்திவ செயற்திட்டத்திற்க்கு தெரிவு செய்யப்பட்ட சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம் மற்றும் கல்முனை அல்-மிஸ்பாஹ் வித்தியாலம் ஆகிய மாணவர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ தொடர்பான 3 நாள் பயிற்சி செயலமர்வுகள் இடம்பெற்றன.

இதில் முதலுதவிப் பயிற்சி தொடர்பான முதல் இரண்டு நாள் செயலமர்வுகள் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஐ. எம். சைபுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் MACF. ரியாசின் அழைப்பின் பேரில் வளவாளர்களாக கல்முனை பிராந்திய சுகாதார பனிமனையின் வைத்தியர் வைத்திய கலாநிதி A.L.M. பாரூக் இணைந்ததாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முதலுதவிப் பயிற்சி தாதிய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மூன்றாம் நாள் நிகழ்வாக பாடசாலை மாணவர்களுக்கு தீ விபத்து தொடர்பில் விசேட பயிற்சி செயலமர்வு கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அல்-மிஷ்பாஹ் பாடசாலையின் அதிபர் ரசாகின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளரின் பிரதிநிதியாக கணித பாடத்துக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் சஞ்சீவன் கலந்து கொண்டிருந்தார்.

இப் பயிற்சி நெறியில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு ஊழியர்கள் கலந்து கொண்டு தமது அனுபவங்களையும் தொழிநுட்ப முறைகளையும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தர முகாமைத்துவப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. P.G.P டேணியல் மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு தொடர்பிலும் முதலுதவிகள் தொடர்பிலும் விளக்கமளித்தார் 

இந்நிகழ்வினை அம்பாரை மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் MACM. ரியாசின் பணிப்பின் பேரில் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ALM. Althaf  நெறிப்படுத்தி நடாத்தியதோடு இந்நிகழ்வுகளினை பாடசாலை சார்பில் அனர்த்த முகாமைத்துவத்திற்க்கு பொறுப்பான ஆசிரியர்களான UKM. Mubarak மற்றும் AMM. Zahir ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வுகளில் சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேச செயகல அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் பாடசாலை சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியரும் கோட்ட மட்ட சுற்றாடல் கழக ஆணையாளருமான ஏ. சியாம், பாடசாலை ஆசிரியர் எம். றிஸ்வான் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் அஸ்லம் ஹுஜா அல் மிஷ்பாஹ் பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் முபீத் அவர்களும் இரு பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended